ஆளில்லாத கடையில் டீ ஆத்துதல்: புதிது வழங்கும் மீம்

🕔 April 28, 2017

றக்காமம் – மாயக்கல்லி மலையில் அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதனைத் தடுத்து நிறுத்துமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெனாண்டோவிடம், மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் கோரிக்கை விடுத்ததாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில், அவ்வாறு விகாரை அமைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை தடுத்து நிறுத்துவதற்கான எந்தவித அதிகாரங்களும் தனக்கு இல்லை என்று, ஆளுநர் ஒஸ்டின் பெனாண்டோ, தன்னிடம் கூறியதாக – முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அதிகாரம் இல்லாத ஒருவரிடம் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளமையானது, அரசியலரங்கில் இப்போது பகிடிக்குரிய விடயமாகப் பார்க்கப்படுகிறது.

அதை வைத்து ‘புதிது’ இணையத்தளம் உருவாக்கியுள்ள மீம் உங்களுக்காக..

Comments

புதிது பேஸ்புக் பக்கம்