இந்த வருடத்துக்கான இரண்டு பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிப்பு

இந்த வருடத்துக்கான இரண்டு பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிப்பு 0

🕔7.Oct 2022

இந்த வருடத்துக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுச் தராதர உயர்தரப் பரீட்சை ஆகியவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, கல்விப் பொதுச் தராதர உயர்தரப் பரீட்சை 2023 ஜனவரி 23 முதல் பிப்ரவரி 17 வரை நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது. 2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில்

மேலும்...
கோழிக்கறிச் சட்டிக்குள் தவறி விழுந்த நிலையில், சிகிச்சை பெற்றுவந்த கைதி மரணம்

கோழிக்கறிச் சட்டிக்குள் தவறி விழுந்த நிலையில், சிகிச்சை பெற்றுவந்த கைதி மரணம் 0

🕔7.Oct 2022

அகுனகொலபலஸ்ஸ சிறைச்சாலையில் கைதி ஒருவர், தீக்காயங்களுக்கு உள்ளாகி 10 நாட்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். இவர் 2001ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவராவார். குறித்த கைதிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து மன்னிப்புகளுடன் 2028 ஆம் ஆண்டில் அவர் விடுவிக்கப்படவிருந்ததாகவும் பேச்சாளர் கூறியுள்ளார். அகுனகொலபலஸ்ஸ சிறைச்சாலையின்

மேலும்...
நான்கு மாதங்களில் 35 பேர், நாட்டில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடுகளில் பலி

நான்கு மாதங்களில் 35 பேர், நாட்டில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடுகளில் பலி 0

🕔7.Oct 2022

நாட்டில் கடந்த மே 30 ஆம் திகதி தொடக்கம் இன்று வரை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் மொத்தம் 35 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இந்தக் காலப்பகுதிக்குள் 29 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 14 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்

மேலும்...
பொருளாதார நெருக்கடிக்குக் காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு உச்ச நீதிமன்று உத்தரவு

பொருளாதார நெருக்கடிக்குக் காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு உச்ச நீதிமன்று உத்தரவு 0

🕔7.Oct 2022

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. அமைச்சரவை அமைச்சர்கள், இலங்கை நாணய சபை, மத்திய வங்கியின் முன்னாள்

மேலும்...
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படுகிறது: அமைச்சர் கஞ்சன

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படுகிறது: அமைச்சர் கஞ்சன 0

🕔7.Oct 2022

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று (07) மீண்டும் மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி துறை அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். இரண்டு கப்பல்களிலிருந்து தரையிறக்கப்பட்ட மசகு எண்ணெய்யினை பயன்படுத்தி இதுவரை சப்புகஸ்கந்த மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை செயற்படுத்தி வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். எனினும், மூன்றாவது கப்பல் இலங்கைக்கு வந்துள்ளபோதும், அதற்கு செலுத்துவதற்கு அன்னிய

மேலும்...
சுமந்திரன், சாணக்கியனைப் பின்தொடர்ந்த EP BEY 2600 இலக்க மோட்டார் சைக்கிள்: உயிருக்கு அச்சுறுத்தல் எனத் தெரிவிப்பு

சுமந்திரன், சாணக்கியனைப் பின்தொடர்ந்த EP BEY 2600 இலக்க மோட்டார் சைக்கிள்: உயிருக்கு அச்சுறுத்தல் எனத் தெரிவிப்பு 0

🕔6.Oct 2022

புலனாய்வாளர்கள் என சொல்லப்படுபவர்களினால் தனக்கும் சாணக்கியனது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர்; “நானும் சாணக்கியனும் நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக நேற்றைய தினம் நண்பகல் நாடாளுமன்றத்தில்

மேலும்...
இரண்டு குற்றச்சாட்டுகளில் இருந்து றிசாட் விடுவிப்பு

இரண்டு குற்றச்சாட்டுகளில் இருந்து றிசாட் விடுவிப்பு 0

🕔6.Oct 2022

தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்களிப்பதற்காக மக்களை அழைத்துச் சென்றமை மற்றும் அதற்காக பொது மக்களின் பணத்தை மோசடி செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் இருந்து முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த இந்த குற்றச்சாட்டுக்கள் இன்றைய தினம் கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு

மேலும்...
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலைக்குள் போதைப் பொருள் வியாபாரம்: மாணவர்கள் சிக்கிய போதும், சம்பவத்தை மூடி மறைக்கிறது நிர்வாகம்

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலைக்குள் போதைப் பொருள் வியாபாரம்: மாணவர்கள் சிக்கிய போதும், சம்பவத்தை மூடி மறைக்கிறது நிர்வாகம் 0

🕔6.Oct 2022

– அஹமட் – அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் போதைப் பொருள் விற்பனையில் மாணவர் ஒருவர் ஈடுபட்ட விவகாரத்தை பாடசாலையின் அதிபர் மற்றும் நிருவாகத்தினர் மூடி மறைத்துள்ளதாக அறிய முடிகிறது. நேற்று முன்தினம் (04ஆம் திகதி) அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் – போதைப் பொருள் வைத்திருந்த மாணவர் ஒருவரையும், அதனைப் பெற்றுக்கொடுத்த மற்றொரு மாணவரையும் ஆசிரியர் ஒருவர்

மேலும்...
தந்தை, இரண்டு மகன்கள் துப்பாக்கிச் சூட்டில் பலி: மினுவாங்கொடயில் சம்பவம்

தந்தை, இரண்டு மகன்கள் துப்பாக்கிச் சூட்டில் பலி: மினுவாங்கொடயில் சம்பவம் 0

🕔6.Oct 2022

தந்தை மற்றும் இரண்டு மகன்கள் மினுவாங்கொடயில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மூன்று பேரும் அவர்களது வீட்டினுள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மினுவாங்கொட – கமங்கெதர பிரதேசத்தில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சமீப காலமாக நாட்டில் துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
கல்முனையிலிருந்து கடலுக்குச் சென்றவர்கள், 10 நாளாகியும் கரை திரும்பவில்லை: தேடுதல் தொடர்கிறது

கல்முனையிலிருந்து கடலுக்குச் சென்றவர்கள், 10 நாளாகியும் கரை திரும்பவில்லை: தேடுதல் தொடர்கிறது 0

🕔6.Oct 2022

– பாறுக் ஷிஹான் – கல்முனையிலிருந்து கடந்த 10 தினங்களுக்குகு முன்னர் படகு ஒன்றில் கடலுக்கு சென்ற மீனவர்கள் இதுவரை கரைக்கு திரும்பவில்லை. கடந்த மாதம் 26ஆம் திகதி மாலை புறப்பட்டு சென்ற 4 மீனவர்கள் குறித்து, இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என தெரியவருகிறது. மேற்குறித்த  மீனவர்கள் காணாமல் சென்ற விடயத்தை, அதிகாரிகளின் கவனத்துக்கு  மீனவ

மேலும்...
எரிவாயு விலை குறைந்தது: லிட்ரோ அறிவிப்பு

எரிவாயு விலை குறைந்தது: லிட்ரோ அறிவிப்பு 0

🕔5.Oct 2022

லிட்ரோ எரிவாயுவின் விலைகளைக் குறைத்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. எரிவாயு விலைகளில் இன்று (05) திருத்தங்களை மேற்கொள்வதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி, 12.5 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 271 ரூபாவினாலும், 5 கிலோ சிலிண்டர் 107 ரூபாவினாலும், 2.3 கிலோ சிலிண்டர் 48 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளன. உலக சந்தையில் எரிவாயுவுக்கு ஏற்பட்டுள்ள

மேலும்...
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு: ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு அழைப்பாணை

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு: ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு அழைப்பாணை 0

🕔5.Oct 2022

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக ஏன் தண்டிக்கப்படக் கூடாது என்பதற்கான காரணத்தை வெளியிடுமாறு ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அழைப்பாணை அனுப்பியுள்ளது. இதன்படி ஒக்டோபர் 13ஆம் திகதி சனத் நிஷாந்தவை மேன்முறையீட்டு நீதிமன்றில் நேரில் ஆஜராகுமாறும் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நீதவான்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே அமைப்பான

மேலும்...
தொலைபேசி மற்றும் கொடுப்பனவுத் தொலைக்காட்சிகளின் கட்டணங்கள் அதிகரிப்பு

தொலைபேசி மற்றும் கொடுப்பனவுத் தொலைக்காட்சிகளின் கட்டணங்கள் அதிகரிப்பு 0

🕔5.Oct 2022

தமது சேவைக் கட்டணங்கள் இன்று (ஒக்டோபர் 05ஆம் திகதி) முதல் உயர்த்தப்படுவதாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியை அமல்படுத்தியதால் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன. வருடத்துக்கு 120 மில்லியன் ரூபாவை வருமானமாகப் பெறும் இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், சேவை வழங்குநர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மீது

மேலும்...
கோதுமை மா விலை: குறையும் என்றார் அமைச்சர்; கூட்டுகிறது நிறுவனங்கள்

கோதுமை மா விலை: குறையும் என்றார் அமைச்சர்; கூட்டுகிறது நிறுவனங்கள் 0

🕔4.Oct 2022

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இன்று (04) தெரிவித்துள்ளது. சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியை அரசு அமுல்படுத்துவதன் காரணமாக இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே இலங்கையின் இரண்டு முதன்மை கோதுமை மா நிறுவனங்களும் ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 13 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக

மேலும்...
மாணவியின் நிர்வாண வீடியோவை வெளியிட்டவர்கள் கைது

மாணவியின் நிர்வாண வீடியோவை வெளியிட்டவர்கள் கைது 0

🕔4.Oct 2022

பதினேழு வயதுடைய பாடசாலை மாணவியின் நிர்வாண வீடியோ காட்சிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட மூன்று இளைஞர்கள் மொனராகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 20, 23 மற்றும் 24 வயதுடையவர்களாவர். இவர்கள் மொனராகல பிரதேசத்திலுள்ள பண்டாரவாடிய, பட்டியாலந்த, மகந்தனமுல்ல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வீடியோவை பாடசாலை மாணவியின் காதலன் பெற்று தனது நண்பர்களுக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்