தலைப்புச் செய்திகள்

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு: ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு அழைப்பாணை

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக ஏன் தண்டிக்கப்படக் கூடாது என்பதற்கான காரணத்தை வெளியிடுமாறு ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அழைப்பாணை அனுப்பியுள்ளது.

இதன்படி ஒக்டோபர் 13ஆம் திகதி சனத் நிஷாந்தவை மேன்முறையீட்டு நீதிமன்றில் நேரில் ஆஜராகுமாறும் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நீதவான்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே அமைப்பான இலங்கை நீதிச் சேவை சங்கம் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு விண்ணப்பத்தின் அடிப்படையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.