
தமது சேவைக் கட்டணங்கள் இன்று (ஒக்டோபர் 05ஆம் திகதி) முதல் உயர்த்தப்படுவதாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியை அமல்படுத்தியதால் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.
வருடத்துக்கு 120 மில்லியன் ரூபாவை வருமானமாகப் பெறும் இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், சேவை வழங்குநர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மீது 2.5 வீதம் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியை அரசு விதிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி மற்றும் கட்டணத் தொலைக்காட்சிகளுக்கான புதிய கட்டணங்கள் குறித்த விவரங்களை தங்கள் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் பெறலாம் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மேலும் தெரிவித்துள்ளன.



