எரிவாயு விலை குறைந்தது: லிட்ரோ அறிவிப்பு

🕔 October 5, 2022

லிட்ரோ எரிவாயுவின் விலைகளைக் குறைத்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

எரிவாயு விலைகளில் இன்று (05) திருத்தங்களை மேற்கொள்வதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்திருந்தது.

அதன்படி, 12.5 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 271 ரூபாவினாலும், 5 கிலோ சிலிண்டர் 107 ரூபாவினாலும், 2.3 கிலோ சிலிண்டர் 48 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளன.

உலக சந்தையில் எரிவாயுவுக்கு ஏற்பட்டுள்ள விலை வீழ்ச்சியை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு:

12.5 கிலோ சிலிண்டர் – 4,280 ரூபா.
5 கிலோ சிலிண்டர் 1,720 ரூபா
2.3 கிலோ சிலிண்டர் – 800 ரூபா

Comments

புதிது பேஸ்புக் பக்கம்