பொருளாதார நெருக்கடிக்குக் காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு உச்ச நீதிமன்று உத்தரவு

🕔 October 7, 2022

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

அமைச்சரவை அமைச்சர்கள், இலங்கை நாணய சபை, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான பேராசிரியர் டப்ளியு.டி. லக்ஷ்மன், அஜிட் நிவாட் கப்ரால், திறைசேரியின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல, ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் பி.பி. ஜயசுந்தர, முன்னாள் நிதியமைச்சர் அலிசப்றி மற்றும் இலங்கை நாணய சபையின் தற்போதைய அங்கத்தவர் எஸ்.எஸ்.டப்ளியு. குமாரசிங்க ஆகியோரும் இந்த மனுவில் எதிராளிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

டரான்ஸ்பேரன்சி இன்ரநஷனல் சிறிலங்கா தாக்கல் செய்த மேற்படி மனுவில், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணையை நடத்துவதற்கு உத்தரவை பிறப்பிக்குமாறு நீதிமன்றிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை கருத்தில் கொண்டு, அதில் பெயரிடப்பட்ட பட்டவர்களளால் எடுக்கப்பட்ட முக்கிய பொருளாதார முடிவுகள் குறித்து விசாரணை நடத்துமாறு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்