தலைப்புச் செய்திகள்

கோழிக்கறிச் சட்டிக்குள் தவறி விழுந்த நிலையில், சிகிச்சை பெற்றுவந்த கைதி மரணம்

அகுனகொலபலஸ்ஸ சிறைச்சாலையில் கைதி ஒருவர், தீக்காயங்களுக்கு உள்ளாகி 10 நாட்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இவர் 2001ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவராவார்.

குறித்த கைதிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து மன்னிப்புகளுடன் 2028 ஆம் ஆண்டில் அவர் விடுவிக்கப்படவிருந்ததாகவும் பேச்சாளர் கூறியுள்ளார்.

அகுனகொலபலஸ்ஸ சிறைச்சாலையின் சிறைச்சாலை அத்தியட்சகர் – அந்தக் கைதியை சிறைச்சாலை சமயலறையில் வேலைக்கு அமர்த்தியுள்ளார்.

கடந்த செப்டெம்பர் 26ஆம் திகதி – சக கைதி ஒருவருடன் அடுப்பிலிருந்து கறிச்சட்டியை எடுக்கும்போது, அவரின் கால் தவறி கோழிக் கறிச்சட்டிக்குள் விழுந்த நிலையில், தங்காலை வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

தங்காலை வைத்தியசாலையில் 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.