மாணவியின் நிர்வாண வீடியோவை வெளியிட்டவர்கள் கைது

🕔 October 4, 2022

தினேழு வயதுடைய பாடசாலை மாணவியின் நிர்வாண வீடியோ காட்சிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட மூன்று இளைஞர்கள் மொனராகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 20, 23 மற்றும் 24 வயதுடையவர்களாவர். இவர்கள் மொனராகல பிரதேசத்திலுள்ள பண்டாரவாடிய, பட்டியாலந்த, மகந்தனமுல்ல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீடியோவை பாடசாலை மாணவியின் காதலன் பெற்று தனது நண்பர்களுக்கு வழங்கியுள்ளதாகவும், பின்னர் அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மொனராகல நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்