ரணில் விக்ரமசிங்க வீட்டுக்கு தீ வைத்தவர்களை கைது செய்ய உதவுமாறு கோரிக்கை

ரணில் விக்ரமசிங்க வீட்டுக்கு தீ வைத்தவர்களை கைது செய்ய உதவுமாறு கோரிக்கை 0

🕔21.Jul 2022

மக்கள் போராட்டத்தின் போது ஜூலை 09 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் (சிஐடி) பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. சட்டவிரோதமாக பிரவேசித்தமை, வீட்டுக்கு தீ வைத்தமை, ஜனாதிபதியின் வாகனத்தை சேதப்படுத்தியமை போன்றவற்றில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்கள் அல்லது வீடியோ காட்சிகளை

மேலும்...
ஜனாதிபதி பதவிப் பிரணமாண நிகழ்வின் போது மின்தடை; நேரடி ஒளிபரப்பு நின்றது: சிஐடியிடம் விசாரிணை ஒப்படைப்பு

ஜனாதிபதி பதவிப் பிரணமாண நிகழ்வின் போது மின்தடை; நேரடி ஒளிபரப்பு நின்றது: சிஐடியிடம் விசாரிணை ஒப்படைப்பு 0

🕔21.Jul 2022

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிப் பிரமாண நிகழ்வின் போது, நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட திடீர் மின்தடை தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ‘லங்காதீப’ தெரிவித்துள்ளது. ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். அரச தொலைக்காட்சியான சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு (ஐடிஎன்) மற்றும் ஏனைய தொலைக்காட்சி அலைவரிசைகளுடன் இணைந்து விழாவை

மேலும்...
புதிய அமைச்சரவை 25 பேரை தாண்டாமல் நியமிக்கப்படும்; எதிரணியிலிருந்து பிரதமர்: ஆங்கில ஊடகம் தகவல்

புதிய அமைச்சரவை 25 பேரை தாண்டாமல் நியமிக்கப்படும்; எதிரணியிலிருந்து பிரதமர்: ஆங்கில ஊடகம் தகவல் 0

🕔21.Jul 2022

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் 20 – 25 பேர் கொண்ட அமைச்சரவை அடுத்த சில நாட்களுக்குள் நியமிக்கப்படும் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு அரசாங்கத்தில் பொறுப்புகள் வழங்கப்படவுள்ளதாகவும் டெய்லி மிரர் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவரை பிரதமராக ஜனாதிபதி நியமிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்...
ஜனாதிபதியாக ரணில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்

ஜனாதிபதியாக ரணில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார் 0

🕔21.Jul 2022

இலங்கையின் 08ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அவர் சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்தார். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இந் நிகழ்வு இடம்பெற்றது. கோட்டாபய ராஜபக்ஷ ராஜிநாமா செய்தமையினை அடுத்து ஏற்பட்ட ஜனாதிபதி வெற்றிடத்துக்கு நாடாளுமன்ற தேர்தல் மூலம்

மேலும்...
17 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுதியுடைய கஞ்சா, காரைநகரில் சிக்கியது

17 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுதியுடைய கஞ்சா, காரைநகரில் சிக்கியது 0

🕔20.Jul 2022

யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பகுதியில் கடத்தப்பட்ட பெருமளவு கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். நேற்று (19) இரவு டிங்கி படகு ஒன்றில் குறித்த தொகை கஞ்சா கடத்தப்பட்டபோது, கடற்படையினர் இதனை கைப்பற்றியதாக குறிப்பிட்டுள்ளனர். இதன்போது சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்கள் மாதகல் பகுதியைச் சேர்ந்த 42 மற்றும் 51 வயதுடையவர்கள் எனவும் கடற்படை

மேலும்...
சர்வதேச செல்வாக்கினால், நாட்டு நெருக்கடிகளைத் தீர்ப்பார்: ரணில் குறித்து அசாத் சாலி தெரிவிப்பு

சர்வதேச செல்வாக்கினால், நாட்டு நெருக்கடிகளைத் தீர்ப்பார்: ரணில் குறித்து அசாத் சாலி தெரிவிப்பு 0

🕔20.Jul 2022

நாட்டின் எட்டாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவை நாடாளுமன்றம் தெரிந்தெடுத்திருப்பது ஜனநாயகத்துக்கு கிடைத்த பெரும் வெற்றியென தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் மேல்மாகாண முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வாழ்த்தி, அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது; “முதிர்ந்த அரசியல் அனுபவமுள்ள புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல பாதைகளை கடந்து

மேலும்...
சீருடையுடன் எரிபொருள் பெறுவதற்கு வந்த முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு விளக்க மறியல்

சீருடையுடன் எரிபொருள் பெறுவதற்கு வந்த முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு விளக்க மறியல் 0

🕔20.Jul 2022

– பாறுக் ஷிஹான் – எரிபொருளை நிரப்புவதற்காக வருகை தந்த முன்னாள் பிரதம பொலிஸ் அதிகாரியை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 18ஆம் திகதியன்று மாலை கல்முனை பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக மோட்டார் சைக்கிள் ஒன்றில் வருகை தந்த நிலையில், இவரை பொலிஸார் கைது செய்தனர். இந்நிலையில்

மேலும்...
பிரதமராகிறார் தினேஷ் குணவர்த்தன

பிரதமராகிறார் தினேஷ் குணவர்த்தன 0

🕔20.Jul 2022

புதிய பிரதமராக சபை முதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன நியமிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. கோட்டாபய ராஜபக்ஷ பதவி நீங்கியமையை அடுத்து, பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க – பதில் ஜனாதிபதியாக பதவியேற்ற போதும், பிரதமராக எவரும் நியமிக்கப்படவில்லை. பிரதமர் பதவியையும் ரணில் விக்ரமசிங்கவே தன்வசம் வைத்திருந்தார். இந்த நிலையில், இன்று ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகத்

மேலும்...
ரணிலின் இடத்தை நிரப்ப வரும், ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த எம்.பி யார்?

ரணிலின் இடத்தை நிரப்ப வரும், ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த எம்.பி யார்? 0

🕔20.Jul 2022

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவானமையை அடுத்து ஏற்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்கு, அவரின் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஒருவர் தெரிவு செய்யப்படவுள்ளார். ரணில் விக்ரமசிங்க – ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்புரிமை மூலம் நாடாளுமன்றம் பிரவேசித்தார். எனவே, தற்போது வெற்றிடமாகியுள்ள இடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை ஐக்கிய தேசியக் கட்சி தெரிவு செய்யும். கடந்த

மேலும்...
புதிய ஜனாதிபதியாக ரணில் தெரிவானார்

புதிய ஜனாதிபதியாக ரணில் தெரிவானார் 0

🕔20.Jul 2022

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிஙக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றில் இன்று (20) நடந்த வாக்கெடுப்பில் வெற்றிபெற்றதை அடுத்து, அவர் ஜனாதிபதியாக வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இன்று நாடாளுமன்றில் நடத்தப்பட்ட ரகசிய வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்க 134 வாக்குகளைப் பெற்றார். இதேவேளை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட டலஸ் அலகபெரும 82 வாக்குகளையும், அனுர

மேலும்...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்ற டலஸ் – சஜித் தரப்பு இணக்கம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்ற டலஸ் – சஜித் தரப்பு இணக்கம் 0

🕔20.Jul 2022

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு டலஸ் – சஜித் தரப்பு உடன்பட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இன்று நடைபெறவுள்ள ஜனாதிபதி தெரிவின் போது, டலஸ் அலக பெருமவுக்கு வாக்களிப்பதென தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ள நிலையில், கூட்டணியின் கோரிக்கைக்கு டலஸ் – சஜித் தரப்பு உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவித்தல்,

மேலும்...
புதிய ஜனாதிபதி தெரிவு: வாக்களிப்பு நடைமுறையை இறுக்கமாக்கினார் சபாநாயகர்

புதிய ஜனாதிபதி தெரிவு: வாக்களிப்பு நடைமுறையை இறுக்கமாக்கினார் சபாநாயகர் 0

🕔20.Jul 2022

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ரகசிய வாக்களிப்பு இன்று (20) நடைபெறறவுள்ளது. இந்த நிலையில் வாக்களிக்கும் இடத்துக்கு கைத் தொலைபேசிகளை கொண்டு வர வேண்டாம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். உரிய விதிகளுக்கு அமைவாக நாடாளுமன்றத்தினால் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இன்றைய வாக்கெடுப்பில் ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து, அதனை வெற்றியடையச் செய்வதற்கு அனைத்து

மேலும்...
ஜனாதிபதி தெரிவில் யாருக்கு ஆதரவு: தீர்மானத்தை அறிவித்தது சுதந்திரக் கட்சி

ஜனாதிபதி தெரிவில் யாருக்கு ஆதரவு: தீர்மானத்தை அறிவித்தது சுதந்திரக் கட்சி 0

🕔19.Jul 2022

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமது கட்சி யாருக்கும் வாக்களிக்கப் போவதில்லை என சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். மேலும் ஜனாதிபதி போட்டியில் களமிறங்குவோர் தமது

மேலும்...
பாடசாலைகளைத் திறக்கும் திகதி அறிவிப்பு

பாடசாலைகளைத் திறக்கும் திகதி அறிவிப்பு 0

🕔19.Jul 2022

பாடசாலை விடுமுறையை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24) வரை நீடிக்க கல்வி அமைச்சு இன்று தீர்மானித்துள்ளதுடன் பாடசாலைகள் திங்கட்கிழமை (25) திறக்கப்படும். அமைச்சின் செயலாளர், தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம், பணிப்பாளர்கள் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்கள் உட்பட மேலதிக செயலாளர்கள் கலந்துகொண்ட கலந்துரையாடலொன்று அமைச்சில் இணையம் ஊடாக இடம்பெற்றது. தற்போதைய எரிபொருள் நெருக்கடி, போக்குவரத்து

மேலும்...
டலஸ் ஜனாதிபதியானால், சஜித் பிரதமர்: உடன்படிக்கை என்கிறார் ஐ.ம.சக்தி  செயலாளர்

டலஸ் ஜனாதிபதியானால், சஜித் பிரதமர்: உடன்படிக்கை என்கிறார் ஐ.ம.சக்தி செயலாளர் 0

🕔19.Jul 2022

நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதமராக நியமிக்கப்படுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். உடன்படிக்கையின் அடிப்படையில் இது மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். “நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு போதுமான ஆதரவு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்