
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ரகசிய வாக்களிப்பு இன்று (20) நடைபெறறவுள்ளது.
இந்த நிலையில் வாக்களிக்கும் இடத்துக்கு கைத் தொலைபேசிகளை கொண்டு வர வேண்டாம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.
உரிய விதிகளுக்கு அமைவாக நாடாளுமன்றத்தினால் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இன்றைய வாக்கெடுப்பில் ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து, அதனை வெற்றியடையச் செய்வதற்கு அனைத்து தரப்பினரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாக சபாநாயகர் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1981 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தலுக்கான விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் பிரகாரம், அனைத்து வழிகாட்டல்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, ரகசிய வாக்கெடுப்பின் தேர்தல் அதிகாரியாக செயற்படும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.



