
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு டலஸ் – சஜித் தரப்பு உடன்பட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று நடைபெறவுள்ள ஜனாதிபதி தெரிவின் போது, டலஸ் அலக பெருமவுக்கு வாக்களிப்பதென தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ள நிலையில், கூட்டணியின் கோரிக்கைக்கு டலஸ் – சஜித் தரப்பு உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவித்தல், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு ஒத்துழைத்தல், வடக்கு கிழைக்கில் ராணுவம் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் உட்பட அனைத்து தனியார் காணிகளையும் விடுவித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற டலஸ் – சஜித் தரப்பு இணங்கியுள்ளனர்.
காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மீள ஆரம்பிக்க வேண்டும், ஐ.நா மனித உரிமைகள் தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் மற்றும் அதற்கான செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டும், தமிழர் தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்தல் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ளன என, டலஸ் – சஜித் ஆகியோருடனான தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் சந்திப்பில் கலந்து கொண்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகளுக்கு டளஸ் மற்றும் சஜித் இருவரும் இணக்கம் தெரிவித்தமையை அடுத்தே, ஜனாதிபதி தெரிவில் – டலஸுக்கு ஆதரவளிப்பதென தமிழ் தேசியக் கூட்மைப்பு அறிவித்தது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல். பீரிஸும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்.



