தலைப்புச் செய்திகள்

புதிய அமைச்சரவை 25 பேரை தாண்டாமல் நியமிக்கப்படும்; எதிரணியிலிருந்து பிரதமர்: ஆங்கில ஊடகம் தகவல்

ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட போது…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் 20 – 25 பேர் கொண்ட அமைச்சரவை அடுத்த சில நாட்களுக்குள் நியமிக்கப்படும் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு அரசாங்கத்தில் பொறுப்புகள் வழங்கப்படவுள்ளதாகவும் டெய்லி மிரர் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவரை பிரதமராக ஜனாதிபதி நியமிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சியில் இருந்து எந்தத் தலைவரும் பிரதமர் பதவியை ஏற்கத் தயாராக இல்லை என்றால், ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி பதவிக்கு பரிந்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவுக்கு அது வழங்கப்படும்.

அரசியலமைப்பின் படி, அமைச்சர் தொகை 30 பேரைத் தாண்டக்கூடாது.