தலைப்புச் செய்திகள்

ரணில் விக்ரமசிங்க வீட்டுக்கு தீ வைத்தவர்களை கைது செய்ய உதவுமாறு கோரிக்கை

மக்கள் போராட்டத்தின் போது ஜூலை 09 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் (சிஐடி) பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

சட்டவிரோதமாக பிரவேசித்தமை, வீட்டுக்கு தீ வைத்தமை, ஜனாதிபதியின் வாகனத்தை சேதப்படுத்தியமை போன்றவற்றில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்கள் அல்லது வீடியோ காட்சிகளை அனுப்பி வைக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் 071-8594950 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு இந்த சாட்சியங்கள் மேலும் உதவும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.