நீர்க் கட்டணத்துக்கு டிமிக்கி விடும் 40 எம்.பிக்கள்; 10 மில்லியன் ரூபா நிலுவை: ஒருவர் மட்டும் 18 லட்சம் ரூபா பாக்கி

நீர்க் கட்டணத்துக்கு டிமிக்கி விடும் 40 எம்.பிக்கள்; 10 மில்லியன் ரூபா நிலுவை: ஒருவர் மட்டும் 18 லட்சம் ரூபா பாக்கி 0

🕔17.Dec 2021

அமைச்சர்கள் உட்பட தற்போதைய மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 40 பேர், 10 மில்லியன் ரூபா வரை, நீர்க் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது. மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்களில் 20 பேரின் வீடுகளுக்கான நீர்க் கட்டணத் தொகையில் நிலுவை உள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த 40 பேரில் தற்போதைய அரசாங்கத்தில் சிலர்

மேலும்...
20க்கு வாக்களித்த முஸ்லிம் எம்.பிகளுடன், மத்திய கிழக்கு நாடுகளுக்கு நிதியுதவி கோரி பிரதமர் விரைவில்  விஜயம்

20க்கு வாக்களித்த முஸ்லிம் எம்.பிகளுடன், மத்திய கிழக்கு நாடுகளுக்கு நிதியுதவி கோரி பிரதமர் விரைவில் விஜயம் 0

🕔16.Dec 2021

– றிப்தி அலி – நாட்டில் தற்­போது ஏற்­பட்­டுள்ள அமெ­ரிக்க டொலர் நெருக்­க­டிக்கு உதவி கோரும் நோக்கில் பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ, அடுத்த வருட முற்­ப­கு­தியில் மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்­கான விஜ­ய­மொன்றை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக நம்­பத்­த­குந்த வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன. சவூதி அரே­பியா உள்­ளிட்ட சில நாடு­க­ளுக்கே இந்த விஜ­யத்­தினை மேற்­கொண்டு அந்­நா­டு­களின் தலை­வர்­க­ளுடன் பிர­தமர் பேச்சு நடத்தவுள்ளார்

மேலும்...
தங்கல்லயில் சந்தேகத்துக்கிடமான எரிகாயங்களுடன் அமெரிக்கர் மரணம்: பொலிஸ் விசாரணைகள்ஆரம்பம்

தங்கல்லயில் சந்தேகத்துக்கிடமான எரிகாயங்களுடன் அமெரிக்கர் மரணம்: பொலிஸ் விசாரணைகள்ஆரம்பம் 0

🕔16.Dec 2021

அமெரிக்க பிரஜையொருவர் தங்கல்ல – சீனி மோதர பகுதியில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த அமெரிக்கர் தங்கல்லயிலுள்ள இரண்டு மாடி வீடொன்றில் தனியாக வசித்து வந்தார். 54 வயதான அமெரிக்க பிரஜையின் சடலம் வீட்டின் கொல்லைப்புறத்தில் கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்த அமெரிக்கருக்கு உணவு கொண்டு வந்த பெண் ஒருவர், சடலத்தைக் கண்டு பொலிஸாருக்கு

மேலும்...
பொதுபல சேனா உள்ளிட்ட மூன்று அமைப்புகளுக்கு பேஸ்புக் தொடர்ந்தும் தடை

பொதுபல சேனா உள்ளிட்ட மூன்று அமைப்புகளுக்கு பேஸ்புக் தொடர்ந்தும் தடை 0

🕔16.Dec 2021

இலங்கையை தளமாகக் கொண்ட மூன்று அமைப்புகளுக்கு ‘பேஸ்புக்’ தடை விதித்துள்ளது. அந்த வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள், சிங்ஹலே மற்றும் பொதுபலசேனா ஆகிய அமைப்புகளுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் இவ்வாறு பேஸ்புக் தமது விதிமுறைகளுக்கு ஏற்ப, தடை விதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மேற்படி அமைப்புகளுக்கு கடந்த காலங்களிலும் பேஸ்புக் தடை

மேலும்...
டொக்டர் ஷாஃபியை, கட்டாய விடுமுறைக்கால சம்பளத்தை வழங்கி பணியில் அமர்த்துமாறு பணிப்புரை

டொக்டர் ஷாஃபியை, கட்டாய விடுமுறைக்கால சம்பளத்தை வழங்கி பணியில் அமர்த்துமாறு பணிப்புரை 0

🕔16.Dec 2021

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு கருத்தடை சத்திர சிகிச்சை செய்தார் எனும் குற்றச்சாட்டில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்த குருணாகல் போதனா வைத்தியசாலையின் டொக்டர் ஷாஃபி ஷிஹாப்தீனுக்கு வழங்க வேண்டிய சம்பள நிலுவை வழங்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.எச். முணசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். குருணாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுகாதார அமைச்சின் செயலாளர்,

மேலும்...
டொலர் நெருக்கடி:  வெளிநாடுகளிலுள்ள மூன்று தூதரகங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானம்

டொலர் நெருக்கடி: வெளிநாடுகளிலுள்ள மூன்று தூதரகங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானம் 0

🕔16.Dec 2021

இலங்கைக்கான மூன்று வெளிநாட்டுத் தூதரகங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. செலவீனங்களைக் குறைப்பதன் ஊடாக அமெரிக்க டொலர்களை மிச்சப்படுத்தும் நடவடிக்கையான இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கை துணைத் தூதரகம், நைஜீரியாவில் உள்ள தூதரகம், சைப்ரஸில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் ஆகியவை மூடப்படவுள்ளன. பிராங்பேர்ட்டில் உள்ள துணைத் தூதரகத்தின்

மேலும்...
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி: புள்ளி விபரத் திணைக்களம் தெரிவிப்பு

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி: புள்ளி விபரத் திணைக்களம் தெரிவிப்பு 0

🕔16.Dec 2021

2021 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி 1.5 சதவீதம் எதிர்மறையான வளர்ச்சி விகிதத்தில் மதிப்பிடப்பட்டுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2020 மூன்றாம் காலாண்டில் 2,536,490 மில்லியன் ரூபாவிலிருந்து 2021 மூன்றாம் காலாண்டிற்கான நிலையான விலையில் 2,497,489 மில்லியன் ரூபாவாக குறைந்துள்ளது. மேலும், இலங்கையின் மொத்த

மேலும்...
வடக்கு மீனவர்களுக்கு சீனத் தூதுவர், 20 மில்லியன் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு

வடக்கு மீனவர்களுக்கு சீனத் தூதுவர், 20 மில்லியன் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு 0

🕔16.Dec 2021

– பைஷல் இஸ்மாயில் – வடக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீனத் தூதுவர் கீ சென் ஹொங், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து,  கடற்றொழில் மற்றும்  நன்னீர் மீன்வளர்ப்பு, கடலட்டை வளர்ப்பு போன்ற நீர் வேளாண்மைச் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், குறித்த சந்திப்பு இன்று (16) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இலங்கை –

மேலும்...
குறுஞ்சாக்கேணி மிதப்பு பாலம் விபத்தில் கைதான சந்தேக நபர்கள் மூவருக்கு பிணை

குறுஞ்சாக்கேணி மிதப்பு பாலம் விபத்தில் கைதான சந்தேக நபர்கள் மூவருக்கு பிணை 0

🕔16.Dec 2021

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவர் திருகோணமலை நீதிவான் நீதிமன்றினால் இன்று (16) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கைதான மிதப்பு பால உரிமையாளர் உள்ளிட்டோரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மற்றுமொரு சந்தேக நபர் கிண்ணியா நகர சபைத் தவிசாளர்

மேலும்...
இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட நீல மாணிக்கக் கல்லை கொள்வனவு செயவதில், வல்லரசுகள் போட்டி

இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட நீல மாணிக்கக் கல்லை கொள்வனவு செயவதில், வல்லரசுகள் போட்டி 0

🕔16.Dec 2021

நாட்டில் கண்டெடுக்கப்பட்டு ‘ஆசியாவின் ராணி’ எனப் பெயரிடப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய நீல மாணிக்கக் கல்லை (blue sapphire) கொள்வனவு செய்வதில் அமெரிக்காவுக்கும்ட சீனாவுக்கும் இடையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நீலக்கல்லை, இணையவழியில் நடைபெறும், சர்வதேச ஏல விற்பனையில் முன்வைப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இதற்காக ஐக்கிய அரபு ராச்சியம் முன்னதாக விலைமனு

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினராக றபீக் நியமனம்

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினராக றபீக் நியமனம் 0

🕔15.Dec 2021

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பான புதிய உறுப்பினராக அட்டாளைச்சேனை தைக்கா நகரைச் சேர்ந்த ஐ.எல்.எம். றபீக் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று (14) வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி மூலம், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தேர்தல் அதிகாரி எம்.டப்ளியு.எம். சுபியான் இதனை அறிவித்துள்ளார். அட்டாளைச்சேனை பிரதேச சபையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பான

மேலும்...
சமூக அக்கறையற்ற தென்கிழக்குப் பல்கலைக்கழகம்: சிரேஷ்ட ஊடகவியலாளர் பௌசர் சாடல்

சமூக அக்கறையற்ற தென்கிழக்குப் பல்கலைக்கழகம்: சிரேஷ்ட ஊடகவியலாளர் பௌசர் சாடல் 0

🕔15.Dec 2021

பயங்கரத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 07 மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இளம் எழுத்தாளர் அஹ்னாப் ஜசீமுடைய விடுதலைக்காக குரல் எழுப்பும் ஆவணத்தில் இலங்கை பல்கலைக்கழகங்களிலுள்ள கல்வியாளர்கள் கையொப்பமிட்ட போதும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த எந்தக் கல்வியாளரும் குறித்த ஆவணத்தில், அஹ்னாப்புக்கு நீதி கோரி கையொப்பமிட முன்

மேலும்...
கஞ்சாவை பயன்படுத்தவும், வீட்டில் பயிரிடவும் மால்டாவில் அனுமதி

கஞ்சாவை பயன்படுத்தவும், வீட்டில் பயிரிடவும் மால்டாவில் அனுமதி 0

🕔15.Dec 2021

கஞ்சாவை தனிப்பட்ட வகையில் பயன்படுத்தவும், வீட்டில் பயிரிடவும் மால்டா நாட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இவ்வாறானதொரு அனுமதி கிடைத்துள்ள முதல் ஐரோப்பிய நாடாகவும் மால்டா பதிவாகியுள்ளது. ஏழு கிராம் வரை கஞ்சாவை கையில் வைத்துக் கொள்ளவும், அதிகபட்சமாக நான்கு கஞ்சா செடிகள் வரை – வீட்டில் வளர்க்கவும் அந்நாட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பொது

மேலும்...
அஹ்னாப் ஜஸீம்: 20 மாதங்களுக்குப் பின்னர் பிணையில் விடுதலை

அஹ்னாப் ஜஸீம்: 20 மாதங்களுக்குப் பின்னர் பிணையில் விடுதலை 0

🕔15.Dec 2021

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 20 மாத காலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த ‘நவரசம்’ எனும் கவிதை நூலாசிரியர் அஹ்னாப் ஜஸீம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். புத்தளம் மேல் நீதிமன்றம் இன்று (15) இந்தப் பிணை உத்தரவை வழங்கியுள்ளது. அஹ்னாப் ஜஸீமை பிணையில் விடுவிப்பதற்கு சட்ட மா அதிபர் எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதில்லை என,

மேலும்...
சீன உர நிறுவனத்துக்கான பணத்தை – ஊழல் அதிகாரிகள், அரசியல்வாதிகளின் சொந்த நிதியிலிருந்து செலுத்த வேண்டும்

சீன உர நிறுவனத்துக்கான பணத்தை – ஊழல் அதிகாரிகள், அரசியல்வாதிகளின் சொந்த நிதியிலிருந்து செலுத்த வேண்டும் 0

🕔15.Dec 2021

சர்ச்சைக்குரிய உரங்களை இலங்கைக்கு ஏற்றுமதி செய்த சீன நிறுவனத்துக்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், இந்த உடன்படிக்கையில் ஈடுபட்டுள்ள ஊழல் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் சொந்த நிதியிலிருந்து குறித்த தொகை செலுத்தப்பட வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். நேற்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்