சீன உர நிறுவனத்துக்கான பணத்தை – ஊழல் அதிகாரிகள், அரசியல்வாதிகளின் சொந்த நிதியிலிருந்து செலுத்த வேண்டும்

🕔 December 15, 2021

ர்ச்சைக்குரிய உரங்களை இலங்கைக்கு ஏற்றுமதி செய்த சீன நிறுவனத்துக்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், இந்த உடன்படிக்கையில் ஈடுபட்டுள்ள ஊழல் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் சொந்த நிதியிலிருந்து குறித்த தொகை செலுத்தப்பட வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

நேற்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.

“குப்பைகளை எங்களுக்கு விற்பனை செய்த சீன நிறுவனத்துக்கு, எங்களிடமுள்ள சிறிதளவு டொர்களை வழங்குவதாக இருந்தால், அதனை திறைசேரியில் இருந்து செலுத்தக் கூடாது. மாறாக, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஊழல் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் சொந்த நிதியில் இருந்தே அந்தப் பணம் வழங்கப்பட வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஊழல் மோசடிகள் மூலம் கிடைக்கும் தரகுப் பணம், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் சட்டைப் பைகளுக்குள் போய் சேர்கின்றன என்பதில் சந்தேகமில்லை என்றும் தேரர் மேலும் தெரிவித்தார்.

சீன நிறுவனமொன்றிடமிருந்து இலங்கை கொள்வனவு செய்த சேதனப் பசளையில், ஆபத்தான நுண்ணுயிர்கள் உள்ளன என ஆய்வுகளில் தெரியவந்தமையை அடுத்து, பசளையுடன் வந்த கப்பலை நாட்டுக்குள் நுழைய விடாமல், இலங்கை நிராகரித்திருந்தது.

இதனையடுத்து, தமக்கு ஏற்பட்ட நட்டத்துக்கு ஈடாக, 08 மில்லியன் டொலர்களை சீன நிறுவனம் கோரிய நிலையில், 6.7 மில்லியன் டொலர்களை வழங்க இலங்கை உடன்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்