டொக்டர் ஷாஃபியை, கட்டாய விடுமுறைக்கால சம்பளத்தை வழங்கி பணியில் அமர்த்துமாறு பணிப்புரை

🕔 December 16, 2021

யிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு கருத்தடை சத்திர சிகிச்சை செய்தார் எனும் குற்றச்சாட்டில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்த குருணாகல் போதனா வைத்தியசாலையின் டொக்டர் ஷாஃபி ஷிஹாப்தீனுக்கு வழங்க வேண்டிய சம்பள நிலுவை வழங்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.எச். முணசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

குருணாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுகாதார அமைச்சின் செயலாளர், தாபன சட்டவிதிகளின் பிரகாரம் அவரை மீண்டும் பணியில் அமர்த்துமாறும், அவர் கட்டாய விடுமுறையில் இருந்த காலப்பகுதிக்கான கொடுப்பனவை மீள செலுத்துமாறு கோரியுள்ளார்.

கருத்தடை சத்திர சிகிச்சை விவகாரத்தால் பெரும் சர்ச்சைக்கு உள்ளான டொக்டர் மொஹமட் ஷாஃபி ஷிஹாப்தீன், இந்தக் குற்றச்சாட்டுகள் காரணமாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார்.

இருந்தபோதிலும், இறுதி வழக்கு விசாரணையின்போது, டொக்டர் ஷாஃபி மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று குற்றப் புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்