கஞ்சாவை பயன்படுத்தவும், வீட்டில் பயிரிடவும் மால்டாவில் அனுமதி

🕔 December 15, 2021

ஞ்சாவை தனிப்பட்ட வகையில் பயன்படுத்தவும், வீட்டில் பயிரிடவும் மால்டா நாட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், இவ்வாறானதொரு அனுமதி கிடைத்துள்ள முதல் ஐரோப்பிய நாடாகவும் மால்டா பதிவாகியுள்ளது.

ஏழு கிராம் வரை கஞ்சாவை கையில் வைத்துக் கொள்ளவும், அதிகபட்சமாக நான்கு கஞ்சா செடிகள் வரை – வீட்டில் வளர்க்கவும் அந்நாட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் பொது இடத்தில் கஞ்சா புகைப்பது மற்றும் குழந்தைகள் முன்பு கஞ்சாவை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளன.

மால்டா நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் கஞ்சா பயன்பாட்டை சட்டபூர்வமாக்கக் கொண்டுவரப்பட்ட மசோதாவுக்கு ஆதரவாக 36 வாக்குகளும் எதிராக 27 வாக்குகளும் பதிவாகின.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்