நீர்க் கட்டணத்துக்கு டிமிக்கி விடும் 40 எம்.பிக்கள்; 10 மில்லியன் ரூபா நிலுவை: ஒருவர் மட்டும் 18 லட்சம் ரூபா பாக்கி

🕔 December 17, 2021

மைச்சர்கள் உட்பட தற்போதைய மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 40 பேர், 10 மில்லியன் ரூபா வரை, நீர்க் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்களில் 20 பேரின் வீடுகளுக்கான நீர்க் கட்டணத் தொகையில் நிலுவை உள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த 40 பேரில் தற்போதைய அரசாங்கத்தில் சிலர் அமைச்சர்களாக உள்ளனர். 10 பேர் ஓய்வூதியம் பெறும் முன்னாள் நாடாளுமன்ற உறப்பினர்களாவர். மேலும் 10 பேர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள். மேலும் சிலர் அமைச்சர்களாகப் பதவி வகித்தவர்கள் என்றும் அவர்கள் இப்போது உயிருடன் இல்லை எனவும் அந்த செய்தி தெரிவிக்கின்றது.

தேசிய நீர் வழங்கல் அதிகார சபைக்குச் செலுத்த வேண்டிய மேற்படி 10 மில்லியன் ரூபாய் நிலுவையில், தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ள ஒருவர் மட்டும் 1.8 மில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளது.

மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து நிலுவைத் தொகை அறவிடப்படும் என – நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உறுதியளித்துள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, கட்டணத்தை செலுத்தத் தவறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமா எனவும் அந்தச் செய்தியில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்