முஸ்லிம் சமய, கலாசார திணைக்களத்துக்கான 09 மாடிக் கட்டடத்தை, புத்த சாசன அமைச்சுக்குப் பெற்றுக் கொள்ள, அமைச்சரவை அங்கீகாரம்

முஸ்லிம் சமய, கலாசார திணைக்களத்துக்கான 09 மாடிக் கட்டடத்தை, புத்த சாசன அமைச்சுக்குப் பெற்றுக் கொள்ள, அமைச்சரவை அங்கீகாரம் 0

🕔10.Mar 2021

முஸ்லிம் சமய விவகாரங்கள் மற்றும் கலாச்சார விவகாரங்கள் திணைக்களத்திற்காக தற்போது நிர்மாணிக்கப்பட்டுள்ள 09 மாடிகளைக் கொண்ட கட்டடம் மற்றும் காணியை புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சுக்கு பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் எனும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த யோசனையை நேற்று

மேலும்...
ஹிருணிகாவை பிடிக்குமாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு வாபஸ் # புதுப்பிக்கப்பட்ட செய்தி

ஹிருணிகாவை பிடிக்குமாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு வாபஸ் # புதுப்பிக்கப்பட்ட செய்தி 0

🕔10.Mar 2021

கைது செய்து நீதிமன்றில் ஆஜர் படுத்துமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெறுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா உத்தரவிட்டுள்ளார். ஹிருனிகா பிரேமசந்திர – தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் ஆஜரானதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னைய செய்தி… முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா

மேலும்...
சஹ்ரானுடன் தன்னைச் சம்பந்தப்படுத்தி பேசிய அமைச்சர் விமலுக்கு எதிராக, மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் சிஐடி யில் முறைப்பாடு:

சஹ்ரானுடன் தன்னைச் சம்பந்தப்படுத்தி பேசிய அமைச்சர் விமலுக்கு எதிராக, மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் சிஐடி யில் முறைப்பாடு: 0

🕔10.Mar 2021

ஈஸ்டர் தின தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரானையும் தன்னையும் தொடர்புபடுத்தி, அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், இன்று புதன்கிழமை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடொன்றை செய்துள்ளதாக, மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அமைச்சர் விமல் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பில், அவரை விசாரணை செய்து, உண்மை நிலையை வெளிப்படுத்துமாறும் சி.ஐ.டி.யினரிடம் அவர்

மேலும்...
38 அரசியல் கட்சிகளை பதிவு செய்ய விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன: தேர்தல்கள்ஆணைக்குழு தெரிவிப்பு

38 அரசியல் கட்சிகளை பதிவு செய்ய விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன: தேர்தல்கள்ஆணைக்குழு தெரிவிப்பு 0

🕔10.Mar 2021

38 அரசியல் கட்சிகளை பதிவுசெய்வதற்கான விண்ணப்பங்கள் தற்போதுவரை கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மாத்திரம் 158 அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளரான, சிரேஷ்ட சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இருந்தபோதும் கட்சிகளைப் பதிவதில் புதிய நெறிமுறைகள் முன்வைக்கப்பட்டமையை அடுத்து, அந்த எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
நாடாளுமன்றுக்கு நீர் வழியாக வந்த உறுப்பினர்: வரலாற்றில் முதல் தடவை எனவும் தெரிவிப்பு

நாடாளுமன்றுக்கு நீர் வழியாக வந்த உறுப்பினர்: வரலாற்றில் முதல் தடவை எனவும் தெரிவிப்பு 0

🕔10.Mar 2021

நாடாளுமன்றத்துக்கு படகில் வரும்பொருட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே விடுத்த கோரிக்கைக்கு சபாநாயகர் அனுமதி வழங்கியுள்ளார். வரலாற்றில் முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு உத்தியோகபூர்வமாக இவ்வாறான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக மதுர விதானகே தெரிவித்துள்ளார். இதனையடுத்து நேற்றைய தினம் அவர் படகு மூலம் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தார். இதேபோல், எதிர்காலத்தில் கொழும்பு நகரின் வாகன நெரிசலுக்கு தீர்வாக

மேலும்...
சில பெண்கள் அணிகின்ற ஆடைகள், ஆண்கள் கூட பாதைகளில் நடக்க முடியாத நிலையை ஏற்படுத்துகின்றன: றிஷாட் பதியுதீன்

சில பெண்கள் அணிகின்ற ஆடைகள், ஆண்கள் கூட பாதைகளில் நடக்க முடியாத நிலையை ஏற்படுத்துகின்றன: றிஷாட் பதியுதீன் 0

🕔9.Mar 2021

இஸ்லாத்தை சரியாக புரிந்துகொள்ள தவறியோரும், புரிந்திருந்தும் காழ்ப்புணர்ச்சியுடன் மறைப்போருமே இஸ்லாத்துக்கு எதிரான வீணான பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார் நாடாளுமன்றில் இன்றுஅவர் உரையாற்றும் போது, அவர் இதனைகக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “நமது நாட்டில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியில்

மேலும்...
ரஞ்சனுடன் படம் எடுப்பதற்கு அனுமதித்த சிறைக்காவலர் பணியிலிருந்து இடைநிறுத்தம்

ரஞ்சனுடன் படம் எடுப்பதற்கு அனுமதித்த சிறைக்காவலர் பணியிலிருந்து இடைநிறுத்தம் 0

🕔9.Mar 2021

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவுடன் படம் எடுத்துக் கொள்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணவை அனுமதித்த சிறைக்காவலர் ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் பணிபுரிந்த சிறைக்காவலர் ஒருவரே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளார். நீதித்துறையை அவமதித்த குற்றச்சாட்டில் 04 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க, அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தண்டனை

மேலும்...
அநுராதபுரத்தில் ‘குதிரை’ கைது

அநுராதபுரத்தில் ‘குதிரை’ கைது 0

🕔9.Mar 2021

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் ‘குதிரை ஓடிய’ ஒருவர் (பரீட்சார்த்தி ஒருவருக்கு பதிலாக பரீட்சை எழுத முற்பட்டவர்) அநுராதபுரம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் இபலோகம பொலிஸ் அதிகாரிகளினால் இவ்வாறு 21 வயதுடைய இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். உறவினர்

மேலும்...
உப்பை அதிகம் உட்கொள்ளும் இலங்கை மக்கள்: மரணத்தை ஏற்படுத்தும் பழக்கம் என தெரிவிப்பு

உப்பை அதிகம் உட்கொள்ளும் இலங்கை மக்கள்: மரணத்தை ஏற்படுத்தும் பழக்கம் என தெரிவிப்பு 0

🕔9.Mar 2021

இலங்கையில் ஒருவர் நாளொன்றிற்கு 09 கிராம் தொடக்கம் 12 கிராம் வரையிலான அதிகளவான உப்பை உட்கொள்கின்றனர் என சுகாதார மேம்பாட்டுப் பணியகம் ஒருவர் நாளொக்கு எடுக்க வேண்டிய உப்பின் அளவு 05 கிராம் (ஒரு தேக்கரண்டி அளவு) என உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ள நிலையிலேயே, இவ்வாறு அதிகளவு உப்பை இலங்கை மக்கள் உட்கொள்கின்றனர். உப்பு

மேலும்...
ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினருக்கான சம்பளம் நிறுத்தம்

ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினருக்கான சம்பளம் நிறுத்தம் 0

🕔8.Mar 2021

ரஞ்சன் ராமநாயக்க – நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கான தகுதி குறித்த கேள்விகள் எழுந்துள்ளமையினை அடுத்து, அவரின் சம்பளம் நாடாளுமன்றத்தினால் நிறுத்தப்பட்டுள்ளது. நீதித்துறை அவமதிப்பு வழங்கில் தண்டனை விதிக்கப்பட் ரஞ்சன் ராமநாயக்க, தற்போது அந்தத் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிப்பதற்கான தகுதி குறித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் 7600 பேர் கைது செய்யப்பட்டனர்: அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் 7600 பேர் கைது செய்யப்பட்டனர்: அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு 0

🕔8.Mar 2021

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் 07ஆயிரத்து 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஆயினும் அந்தத் தொகை தற்போது 300 ஆக குறைந்துள்ளது எனவும் அவர் கூறினார். மாத்தறையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும்...
மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த பொலிஸ் உத்தியோகத்தர் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த பொலிஸ் உத்தியோகத்தர் சேவையிலிருந்து இடைநிறுத்தம் 0

🕔7.Mar 2021

13 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்றித்த 35 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம்சாட்டப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றினார். சம்பந்தப்பட்ட மாணவியின் தாயாரிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குற்றச்சாட்டுக்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் சேவையிலிருந்து இடைநீக்கம்

மேலும்...
ரகசிய தகவல் கிடைத்திருந்தும், செப்டம்பர் தாக்குதலை அமெரிக்காவினாலேயே தடுக்க முடியாமல் போய்விட்டது: மைத்திரி

ரகசிய தகவல் கிடைத்திருந்தும், செப்டம்பர் தாக்குதலை அமெரிக்காவினாலேயே தடுக்க முடியாமல் போய்விட்டது: மைத்திரி 0

🕔7.Mar 2021

இரண்டு வாரங்களுக்கு முன்னரே செப்டம்பர் தாக்குதல் குறித்த ரகசிய தகவல் கிடைத்த போதிலும் அமெரிக்காவினால் அந்த தாக்குதலை தடுக்க முடியாமல் போனதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம் ஆகியவை இலங்கை மட்டுமல்ல, முழு உலகமும் எதிர்கொள்ளும்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்காமைக்கு எதிர்ப்புத்தெரிவித்து, கறுப்பு ஞாயிறு அனுஷ்டிப்பு

ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்காமைக்கு எதிர்ப்புத்தெரிவித்து, கறுப்பு ஞாயிறு அனுஷ்டிப்பு 0

🕔7.Mar 2021

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இதுவரை தீர்வு கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்து கொழும்பு பேராயர் இல்லத்தினால் அறிவிக்கப்பட்ட கருப்பு ஞாயிறு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. கறுப்பு ஞாயிறு குறித்த தெளிவுபடுத்தல்களை பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வெளிப்படுத்தியிருந்தார். இதற்கமைய, இன்றைய தினம் கத்தோலிக்க மக்கள் கறுப்பு

மேலும்...
சாதாரண தரப் பரீட்சை; 55 கொவிட் தொற்றாளர்கள் எழுதுகின்றனர்: ஆணையாளர் தெரிவிப்பு

சாதாரண தரப் பரீட்சை; 55 கொவிட் தொற்றாளர்கள் எழுதுகின்றனர்: ஆணையாளர் தெரிவிப்பு 0

🕔5.Mar 2021

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கொவிட் தொற்றிய 55 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர் என, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். இவர்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார். பரீட்சை மோசடிகளையும், குழறுபடிகளையும் தவிர்க்கும் வகையில் சகல பரீட்சை நிலையங்களையும் உள்ளடக்கும் வகையிலான விசேட மேற்பார்வை வேலைத்திட்டம் அமுலாவதாகவும் அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்