ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினருக்கான சம்பளம் நிறுத்தம்

🕔 March 8, 2021

ஞ்சன் ராமநாயக்க – நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கான தகுதி குறித்த கேள்விகள் எழுந்துள்ளமையினை அடுத்து, அவரின் சம்பளம் நாடாளுமன்றத்தினால் நிறுத்தப்பட்டுள்ளது.

நீதித்துறை அவமதிப்பு வழங்கில் தண்டனை விதிக்கப்பட் ரஞ்சன் ராமநாயக்க, தற்போது அந்தத் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிப்பதற்கான தகுதி குறித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கின் முடிவு வரும் வரை, அவரின் சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினராக ரஞ்சன் ராமநாயக்க பதவி வகிப்பதற்கான உரிமைக்காக, அவரின் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி போராடும் எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ராமநாயக்கவின் சம்பளத்தை நாடாளுமன்றம் நிறுத்தி வைப்பதால், அவர் நாடாளுமன் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அனைத்து வசதிகள் மற்றும் கொடுப்பனவுகளையும் இழப்பார்.

Comments