நாடாளுமன்றுக்கு நீர் வழியாக வந்த உறுப்பினர்: வரலாற்றில் முதல் தடவை எனவும் தெரிவிப்பு

🕔 March 10, 2021

நாடாளுமன்றத்துக்கு படகில் வரும்பொருட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே விடுத்த கோரிக்கைக்கு சபாநாயகர் அனுமதி வழங்கியுள்ளார்.

வரலாற்றில் முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு உத்தியோகபூர்வமாக இவ்வாறான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக மதுர விதானகே தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து நேற்றைய தினம் அவர் படகு மூலம் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தார்.

இதேபோல், எதிர்காலத்தில் கொழும்பு நகரின் வாகன நெரிசலுக்கு தீர்வாக இதனை செயற்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

“இலங்கையில் முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் படகில் பாராளுமன்றம் செல்லும் நாள் இன்று. நான் கடந்த கன்னி அமர்வின் போது உத்தியோகபூர்வமற்ற வகையில் நாடாளுமன்றத்துக்கு படகில் சென்றேன்.

எனினும் இன்று அனைத்து சட்டத் திட்டங்களுக்கு அமைவாக நீர் மார்க்கமாக நாடாளுமன்றத்திற்கு செல்ல புறப்பட்டேன். இதனூடாக நீர் போக்குவரத்தை மேம்படுத்துவற்கு எதிர்ப்பார்க்கிறோம்” எனவும் அவர் கூறியுள்ளார்.

Comments