மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த பொலிஸ் உத்தியோகத்தர் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

🕔 March 7, 2021

13 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்றித்த 35 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றினார்.

சம்பந்தப்பட்ட மாணவியின் தாயாரிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குற்றச்சாட்டுக்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments