ரஞ்சனுடன் படம் எடுப்பதற்கு அனுமதித்த சிறைக்காவலர் பணியிலிருந்து இடைநிறுத்தம்

🕔 March 9, 2021

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவுடன் படம் எடுத்துக் கொள்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணவை அனுமதித்த சிறைக்காவலர் ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் பணிபுரிந்த சிறைக்காவலர் ஒருவரே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

நீதித்துறையை அவமதித்த குற்றச்சாட்டில் 04 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க, அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வருகின்றார்.

ரஞ்சன் ராமநாயக்கவுடன் தான் எடுத்த படத்தை, நாடாளுமன்ற உறுப்பினர் ர் ஹர்ஷன ராஜகருண, தனது பேஸ்புக் பக்கத்தில் நேற்றைய தினம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments