கொரோனா தொற்றுக்குள்ளான 38 மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றினர்

கொரோனா தொற்றுக்குள்ளான 38 மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றினர் 0

🕔1.Mar 2021

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமான நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 38 மாணவர்கள் சிறப்பு நிலையங்களில் இன்று பரீட்சை எழுதியதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். கொவிட் தொற்று காரணமாக பிற்போடப்பட்டிருந்த 2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பமானது. 4513 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமான இப்பரீட்சை எதிர்வதும்,

மேலும்...
ரஊப் ஹசீரின் இழி செயல்: எரியும் நெருப்பில் எண்ணெய் வார்க்கும் அரசியல் பிழைப்புக் குறித்து முஸ்லிம்கள் கண்டனம்

ரஊப் ஹசீரின் இழி செயல்: எரியும் நெருப்பில் எண்ணெய் வார்க்கும் அரசியல் பிழைப்புக் குறித்து முஸ்லிம்கள் கண்டனம் 0

🕔1.Mar 2021

– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய சகோதரர் – ரஊப் ஹசீர் என்பவர் ‘பேஸ்புக்’ பக்கத்தில் நேற்றைய தினம் எழுதியிருந்த பதிவு ஒன்று, சமூகத்தில் குழப்பத்தினையும் அமைதியின்னைமயினையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்து விட்டதாக பலரும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர். கொரோனாவால் மரணிப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கும் வகையிலான வர்த்தமானி

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல் அறிக்கை தொடர்பில், மைத்திரி எடுத்துள்ள தீர்மானம்

ஈஸ்டர் தின தாக்குதல் அறிக்கை தொடர்பில், மைத்திரி எடுத்துள்ள தீர்மானம் 0

🕔1.Mar 2021

ஈஸ்டர் தின தாக்குதல் அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரிடம் தொடர்புகொள்ள முயற்சித்த போது மைத்திரியின் செய்தித் தொடர்பாளரே பதிலளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. “இந்த நேரத்தில் இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க அவர் விரும்பவில்லை. அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகளுக்கு இந்த நேரத்தில் பதிலளிக்க வேண்டாம் என்று முன்னாள்

மேலும்...
கொவிட் உடல்கள் அடக்கம் செய்யப்படுவதை, வேண்டுமென்றே அரசாங்கம் இழுத்தடிக்கிறது: எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

கொவிட் உடல்கள் அடக்கம் செய்யப்படுவதை, வேண்டுமென்றே அரசாங்கம் இழுத்தடிக்கிறது: எதிர்க்கட்சி குற்றச்சாட்டு 0

🕔1.Mar 2021

கொரோனாவினால் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கிய வர்த்தமானியை நடைமுறைப்படுத்துவதை வேண்டுமென்று அதிகாரிகள் தாமதப்படுத்துகின்றனர் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்எச்ஏ. ஹலீம் – கண்டியில் வைத்து குற்றம் சாட்டியுள்ளார். உடல்களை அடக்கம் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ள போதிலும், போதிய வழிகாட்டுதல்கள் இல்லை என தெரிவித்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தாமதப்படுத்திவருகின்றது

மேலும்...
தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட யானையின் நிலையில் மைத்திரி: குமார வெல்கம குற்றச்சாட்டு

தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட யானையின் நிலையில் மைத்திரி: குமார வெல்கம குற்றச்சாட்டு 0

🕔1.Mar 2021

சிறிலங்கா சுதந்திர கட்சியை அடகு வைத்து அரசியல் இலாபத்தை பெற்றுக் கொண்டதன் பயனை, அந்தக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தற்போது அனுபவிக்கிறார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்; “ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலின் உண்மையான குற்றவாளியை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு கண்டறியவில்லை. மாறாக முன்னாள்

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதலுக்கு நீதி கோரி, மார்ச் 07ஆம் திகதியை கறுப்பு ஞாயிறு தினமாக அனுஷ்டிக்க அழைப்பு

ஈஸ்டர் தின தாக்குதலுக்கு நீதி கோரி, மார்ச் 07ஆம் திகதியை கறுப்பு ஞாயிறு தினமாக அனுஷ்டிக்க அழைப்பு 0

🕔1.Mar 2021

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலுக்கு நீதி கிடைக்காமையை முன்னிறுத்தி எதிர்வரும் 07ஆம் திகதியை கறுப்பு ஞாயிறு தினமாக அனுஷ்டிக்கும் படி பேராயர் மெல்கம் ரஞ்சித் அழைப்பு விடுத்துள்ளார். ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் உறவுகளை இழந்த அனைத்துத் தரப்பினருக்கும் நீதி கோரும் போராட்டமாகக் கறுப்பு ஞாயிறு தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தினத்தில் கத்தோலிக்க மக்கள் கறுப்பு

மேலும்...
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம் 0

🕔1.Mar 2021

கொவிட் தொற்று காரணமாக பிற்போடப்பட்டிருந்த 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகிறது. அதன்படி, பரீட்சைக்கு தோற்றவுள்ள அனைத்து மாணவர்களும் இன்று காலை 7:45 மணிக்கு பரீட்சை மத்திய நிலையங்களுக்கு வருமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்தார். நான்காயிரத்து 513 பரீட்சை மத்திய நிலையங்களில் ஆரம்பமாகும் சாதாரண

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்