ஈஸ்டர் தின தாக்குதல் அறிக்கை தொடர்பில், மைத்திரி எடுத்துள்ள தீர்மானம்

🕔 March 1, 2021

ஸ்டர் தின தாக்குதல் அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரிடம் தொடர்புகொள்ள முயற்சித்த போது மைத்திரியின் செய்தித் தொடர்பாளரே பதிலளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“இந்த நேரத்தில் இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க அவர் விரும்பவில்லை. அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகளுக்கு இந்த நேரத்தில் பதிலளிக்க வேண்டாம் என்று முன்னாள் ஜனாதிபதி முடிவு செய்துள்ளார், இதனால் எதுவும் கூற முடியாது” என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது நடவடிக்கை எடுக்குமாறு, ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments