கொரோனா தொற்றுக்குள்ளான 38 மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றினர்

🕔 March 1, 2021

.பொ.த. சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமான நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 38 மாணவர்கள் சிறப்பு நிலையங்களில் இன்று பரீட்சை எழுதியதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்று காரணமாக பிற்போடப்பட்டிருந்த 2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பமானது.

4513 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமான இப்பரீட்சை எதிர்வதும், 10ஆம் திகதி நிறைவடையும்.

இப் பரீட்சைக்கு 06 லட்சத்து 22 ஆயிரத்து 352 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இன்று பரீட்சை நிலையங்களில் வெப்பநிலை பரிசோதனை, கை கழுவுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணல் ஆகிய அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களும் பின்பற்றப்பட்டதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்திருந்தார்.

Comments