க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

🕔 March 1, 2021

கொவிட் தொற்று காரணமாக பிற்போடப்பட்டிருந்த 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகிறது.

அதன்படி, பரீட்சைக்கு தோற்றவுள்ள அனைத்து மாணவர்களும் இன்று காலை 7:45 மணிக்கு பரீட்சை மத்திய நிலையங்களுக்கு வருமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்தார்.

நான்காயிரத்து 513 பரீட்சை மத்திய நிலையங்களில் ஆரம்பமாகும் சாதாரண தரப் பரீட்சை, எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு 06 லட்சத்து 22 ஆயிரத்து 352 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களில் 44 லட்சத்து 23 ஆயிரத்து 746 பேர் பாடசாலை விண்ணப்பதாரிகள் எனவும், ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 606 பேர் தனியார் விண்ணப்பதாரிகள் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது

Comments