ஹிருணிகாவை பிடிக்குமாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு வாபஸ் # புதுப்பிக்கப்பட்ட செய்தி

🕔 March 10, 2021

கைது செய்து நீதிமன்றில் ஆஜர் படுத்துமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெறுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா உத்தரவிட்டுள்ளார்.

ஹிருனிகா பிரேமசந்திர – தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் ஆஜரானதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னைய செய்தி…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்தரவுக்கு எதிராக இன்று புதன்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ஹிருணிகாவை கைது செய்து, நீதிமன்றில் ஆஜர் செய்யும் படியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இளைஞர் ஒருவரைக் கடத்திய குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் ஆஜராகாமையினை அடுத்தே, ஹிருணிகாவுக்கு எதிராக இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி, இளைஞர் ஒருவர் தெமட்டகொடயில் வைத்து டிபென்டர் வாகனத்தில் கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த கடத்தலில் ஹிருணிகா சம்பந்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்