Back to homepage

பிரதான செய்திகள்

அழகிய மாகாணமாக்குவோம்; போஸ்டர் மற்றும் பதாதைகளை அகற்ற, ஆளுநர் உத்தரவு

அழகிய மாகாணமாக்குவோம்; போஸ்டர் மற்றும் பதாதைகளை அகற்ற, ஆளுநர் உத்தரவு 0

🕔21.Jan 2019

– அஹமட் – மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து சுவர்களிலும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் மற்றும் அனுமதி பெறப்படாமல் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதைகளை அகற்றுமாறு, உரிய அதிகாரிகளுக்கு மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரட்ன உத்தரவிட்டுள்ளார். இதனை, தனது பேஸ்புக் பக்கத்தில் ஆளுநர் தெரிவித்துள்ளார். மேலும், போஸ்டர்களை ஒட்டுதல் மற்றும் அனுமதி பெறாமல் பதாதைகளைக் காட்சிப்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறும்,

மேலும்...
புலிகளின் முன்னாள் உறுப்பினர், ஆயுதங்களுடன் கைது

புலிகளின் முன்னாள் உறுப்பினர், ஆயுதங்களுடன் கைது 0

🕔21.Jan 2019

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை ஆயுதங்களுடன் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை பளை பிரதேசத்தில் வைத்துக் கைது செய்துள்ளனர். பயங்கரவாத தடுப்புப் பிரிவின் வவுனியா உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடமிருந்து ஒரு பிஸ்டர், ‘ஷொட் கன்’ துப்பாக்கியொன்று, 126 துப்பாக்கி ரவைகள், வாள்கள் உள்ளிட்டவை

மேலும்...
‘மனமுடைந்ததால்’ இறந்துபோன பொமரேனியன் நாய்க்குட்டி

‘மனமுடைந்ததால்’ இறந்துபோன பொமரேனியன் நாய்க்குட்டி 0

🕔21.Jan 2019

சமூக ஊடகத்தில் பிரபலமான உலகின் அழகான நாய்க்குட்டி என்று அறியப்பட்ட பூ (Boo) தனது 12 வயதில் இறந்துவிட்டது. பூ-வின் நெருங்கிய நண்பனான பட்டி (Buddy) 2017ஆம் ஆண்டு இறந்ததில் இருந்து, பூ “மனம் உடைந்து” காணப்பட்டதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர். அந்த நாய்க்குட்டியின் அதிகாரப்பூர்வமான ஃபேஸ்புக் பக்கத்தில்,”பட்டி எங்களை விட்டுச் சென்றதில் இருந்து அவனது

மேலும்...
ஒலுவில் பல்லைக்கழகத்தில் வைத்திய பீடம்; தீவிர முயற்சியெடுத்து வருவதாக பைசல் காசிம் தெரிவிப்பு

ஒலுவில் பல்லைக்கழகத்தில் வைத்திய பீடம்; தீவிர முயற்சியெடுத்து வருவதாக பைசல் காசிம் தெரிவிப்பு 0

🕔21.Jan 2019

ஒலுவில் பல்கலைக்கழகத்தில் வைத்தியபீடம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் தான் தீவிரமாக ஈடுப்பட்டு வருவதாகவும் அதற்குத் தேவையான முன்னேற்பாடுகளை கட்டம் கட்டமாக செய்துகொண்டிருப்பதாகவும் சுகாதார ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்தார்.நிந்தவூர் ஆயுர்வேத வைத்தியசாலையை நேற்று ஞாயிற்றுக் கிழமை திறந்து வைத்து மக்கள் முன் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில்;“இந்த ஆயுர்வேத

மேலும்...
மற்றொரு குற்றச்சாட்டு; ஹபாயா அணியும் ஆசிரியைகள் ‘பேய்’கள்; மன்ஸுர் வாக்கு மூலம்: ஆதாரம் அம்பலம்

மற்றொரு குற்றச்சாட்டு; ஹபாயா அணியும் ஆசிரியைகள் ‘பேய்’கள்; மன்ஸுர் வாக்கு மூலம்: ஆதாரம் அம்பலம் 0

🕔21.Jan 2019

– முன்ஸிப் அஹமட் – “கிழக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சி பின்தங்கியதற்கு, ஹபாயாவும் ஒரு காரணம்” என்று கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்ஸுர் கூறியதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம். ராஸி முகம்மத் எழுதிய அந்தச் செய்தியில்; பெண் ஆசியர்கள் ஹபாயா அணிந்து வருகின்றமையை, மனித உரிமை ஆணைக்குழு முன்னிலையில், மாகாணக்

மேலும்...
கொழும்பிலிருந்து பிச்சைக்காரர்களை அகற்றத் திட்டம்: எதற்காக என்பதை விளக்குகிறார் ஆஸாத் சாலி

கொழும்பிலிருந்து பிச்சைக்காரர்களை அகற்றத் திட்டம்: எதற்காக என்பதை விளக்குகிறார் ஆஸாத் சாலி 0

🕔20.Jan 2019

பிச்சைக்காரர்கள் மூலம் கொழும்பில் போதைப் பொருள் வர்த்தகம் மேற்கொள்ளப்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மேல்மாகாண ஆளுநர் ஆஸாத் சாலி தெரிவித்துள்ளார். எனவே கொழும்பு நகரிலிருந்து பிச்சைக்காரர்களை அகற்றும் வேலைத்திட்டம்  முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார். இந்த விடயம் குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸாருடன் கலந்துரையாடப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார். மேலும் இவ்வாறு அகற்றப்படும் பிச்சைக்காரர்களுக்கு, வாழ்க்கையை கொண்டு

மேலும்...
நாடு திரும்பினார் ஜனாதிபதி

நாடு திரும்பினார் ஜனாதிபதி 0

🕔20.Jan 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிலிபைன்ஸ் இல் இருந்து நேற்றிரவு நாடு திரும்பினார். கடந்த செவ்வாய்கிழமை பிலிபைன்ஸ் நாட்டுக்கு 13 பேரைக் கொண்ட குழுவினருடன் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது, இலங்கைக்கும் பிலிப்பைன்ஸூக்கும் இடையிலான 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. அத்துடன், 445 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 03 கடன்

மேலும்...
ஹபாயா அணிந்து, ஆட்டிக் கொண்டு வரும் ஆசிரியைகளைப் பார்த்து மாணவர்கள் பயப்படுகின்றனர்: மன்ஸுரின் கருத்தால், முஸ்லிம்கள் ஆத்திரம்

ஹபாயா அணிந்து, ஆட்டிக் கொண்டு வரும் ஆசிரியைகளைப் பார்த்து மாணவர்கள் பயப்படுகின்றனர்: மன்ஸுரின் கருத்தால், முஸ்லிம்கள் ஆத்திரம் 0

🕔20.Jan 2019

கிழக்கின் கல்வி வளர்ச்சி, பின்தங்கியமைக்கு பெண்கள் அணியும் ஹபாயாவும் ஒரு காரணம் என்று, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்ஸுர் கூறியுள்ளமை, முஸ்லிம்கள் மத்தியில் பாரிய ஆத்திரத்தையும், அதிர்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ராஸி முகம்மத், தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தும் ஆக்கமொன்றினை எழுதியுள்ளார். அதனை வழங்குகின்றோம். திருகோணமலை ஷண்முகா வித்தியாலயத்தில் ஹபாயா விவகாரத்தில் பாதிக்கப்பட்ட

மேலும்...
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்தக் கோரும், அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்கிறார் மைத்திரி

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்தக் கோரும், அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்கிறார் மைத்திரி 0

🕔19.Jan 2019

–  சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர். சிவராஜா – அனைத்து மாகாணசபைகளுக்குமான தேர்தலை ஒரே தினத்தில், விரைவில் நடத்துவதற்கு அமைச்சரவையின் அனுமதியை கோரும் விசேட அமைச்சரவைப் பத்திரமொன்றைக் கொண்டுவர ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தீர்மாினத்துள்ளார். குறித்த அமைச்சரவை பத்திரத்தில் கையொப்பமிட்டுள்ள ஜனாதிபதி,  செவ்வாய்கிழமை இடம்பெறவுள்ள அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதனைச் சமர்ப்பிக்கவுள்ளார். ஜனாதிபதியின் அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் நிராகரிக்கப்படாது

மேலும்...
லசந்த கொலைக்கு கோட்டாதான் பொறுப்பு; நீதிமன்றில் தெரிவிப்பு

லசந்த கொலைக்கு கோட்டாதான் பொறுப்பு; நீதிமன்றில் தெரிவிப்பு 0

🕔18.Jan 2019

ஊடகவிலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்புதாரியாக இருந்தார் என்று, அப்போதைய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயகார, விசாரணையாளர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார். கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவைச் சேர்ந்த சுகதபால என்பவர், இந்தத் தகவலை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கூறியதாக,

மேலும்...
வட்டிப் பணத்தில் வீடமைப்பு: பைசல் காசிம் தரப்பு முன்னுக்குப் பின், முரணாக பேசுவதாக குற்றச்சாட்டு

வட்டிப் பணத்தில் வீடமைப்பு: பைசல் காசிம் தரப்பு முன்னுக்குப் பின், முரணாக பேசுவதாக குற்றச்சாட்டு 0

🕔18.Jan 2019

 – எம்.ஏ.எம். முர்ஷித் –நிந்தவூரில் ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் முயற்சியால் அமைக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் வீடமைப்புத் திட்டம் குறித்து, முன்னுக்குப் பின் முரணான தகவல்களை, அமைசர் தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.தேசிய வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோக பூர்வ சுற்றறிக்கையின் படி, “SCATTERED SUBSIDY HOUSING SCHEME ” எனப் படுவது பயனாளிகளின் நிலத்தில் கட்டி நிறைவு

மேலும்...
பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே சிறந்தது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே சிறந்தது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் 0

🕔18.Jan 2019

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே சிறந்தது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை அவர் இது தொடர்பாக கருத்து வெளியிட்டார். தற்போது நடைமுறையில் இல்லாத புதிய முறைமையில் தேர்தலை நடத்துவதை விட, பழைய முறைப்படித் தேர்தலை நடத்துவதே சிறந்தது என்று அவர் கூறினார். ​தேர்தல் நடத்தப்படாமல், காலதாமதமாகின்றமை

மேலும்...
வவுனியாவில் குழாய் நீர் கிணறுகளை, காதர் மஸ்தான் வழங்கினார்

வவுனியாவில் குழாய் நீர் கிணறுகளை, காதர் மஸ்தான் வழங்கினார் 0

🕔18.Jan 2019

குடிநீரின்றி சிரமப்படும் வவுனியாவிலுள்ள கிராமங்களுக்கு ஐ.எஸ்.ஆர்.ஸி நிறுவனத்தின் அனுசரணையில் குழாய்க் கிணறுகளை நிர்மாணித்து, சூரிய சக்தி (Solar power)  மூலம் மின்சாரம் பெற்று தாங்கிகளுக்கு நீரேற்றி வழங்கும்  தொகுதிகளை அமைத்து நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் நேற்று வியாழக்கிழமை வழங்கினார்.ஆசிகுளம், புதுக்குளம், அம்பலாங்கொடல்ல, எட்டமேகஸ்கட, கணேசபுரம், மேனிக்பாம் மற்றும் பாவற்குளம்,மணிபுரம் பகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று, இந்த

மேலும்...
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைது செய்த, அக்கரைப்பற்று பிரதி மேயர் அஸ்மிக்கு பிணை

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைது செய்த, அக்கரைப்பற்று பிரதி மேயர் அஸ்மிக்கு பிணை 0

🕔17.Jan 2019

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் இன்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்ட, அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அஸ்மி அப்துல் கபூர், ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப்பிணையில், கொழும்பு மேலதிக நீதவான் சனோஜா லக்மாலியினால் விடுதலை செய்யப்பட்டார். இதேவேளை, எதிர்வரும் 29ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையிலும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்குச் சென்று வாக்குமூலமொன்றை வழங்குமாறும்

மேலும்...
வைத்தியசாலையில் கைவிடப்பட்ட மாற்றுத் திறனாளி சிறுவனை, அடையாளம் காண உதவுங்கள்

வைத்தியசாலையில் கைவிடப்பட்ட மாற்றுத் திறனாளி சிறுவனை, அடையாளம் காண உதவுங்கள் 0

🕔17.Jan 2019

தம்பதெனிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் கைவிடப்பட்ட சிறுவன் ஒருவரை அடையாளம் காணுமாறு கோரப்படுகிறது. இந்த சிறுவனை கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் திகதி, வைத்தியசாலையில் நபரொருவர் அனுமதித்ததாகவும், அவர் தன்னைப்பற்றி போலியான தகவல்களை வைத்தியசாலைக்கு வழங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது. இந்த நிலையில் ஒருநாள் மட்டும், வைத்தியசாலையில் சிறுவனுடன் தங்கிய மேற்படி நபர், பின்னர் எதுவித அறிவித்தலுமின்றி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்