பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைது செய்த, அக்கரைப்பற்று பிரதி மேயர் அஸ்மிக்கு பிணை
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் இன்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்ட, அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அஸ்மி அப்துல் கபூர், ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப்பிணையில், கொழும்பு மேலதிக நீதவான் சனோஜா லக்மாலியினால் விடுதலை செய்யப்பட்டார்.
இதேவேளை, எதிர்வரும் 29ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையிலும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்குச் சென்று வாக்குமூலமொன்றை வழங்குமாறும் நீதவான் பணித்துள்ளார்.
அவர், மருதானை பிரதேசத்தில் வைத்து இன்று கைதுசெய்யப்பட்டார்.
பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பிலான நபரொருவருடன் அரச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில், தகவல்களை வழங்கினாரென்ற அவருக்கெதிரான குற்றச்சாட்டுகளுக்காக, அவருக்கெதிராக பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
நன்றி: தமிழ் மிரர்