Back to homepage

பிரதான செய்திகள்

ஏப்ரலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலுக்கு சாத்தியமில்லை: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

ஏப்ரலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலுக்கு சாத்தியமில்லை: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் 0

🕔14.Jan 2019

சட்ட ரீதியான தடைகள் உடனடியாக அகற்றப்பட்டாலும் கூட, ஏப்ரல் மாதத்துக்கு முன்னர், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியங்கள் இல்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய டெய்லி மிரர் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார். 06 மாகாண சபைகளுக்கும் தேர்தலை நடத்துவது தொடர்பில், பிரதான அரசியல் கட்சிகளுடன் தமது அலுவலகம் பேச்சு நடத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும்...
ஜனாதிபதித் தேர்தல்தான் அடுத்து நடைபெறும்: ஐ.தே.கட்சி செயலாளர் அகிலவிராஜ் காரியவசம்

ஜனாதிபதித் தேர்தல்தான் அடுத்து நடைபெறும்: ஐ.தே.கட்சி செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் 0

🕔14.Jan 2019

நாட்டில் அடுத்ததாக ஜனாதிபதித் தேர்தலொன்று நடைபெறுவதற்கே அதிக சந்தர்ப்பம் உள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அந்தத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறுவது 500 சதவீரம் உறுதியாகும் எனவும் அவர் கூறியுள்ளார். நிகவரெட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல்,

மேலும்...
தற்போதைய நாடாளுமன்றின் ஆயுள் காலத்துக்குள், பிரச்சினைகளைத் தீர்ப்பது சாத்தியமில்லை: மு.கா. தலைவர் ஹக்கீம்

தற்போதைய நாடாளுமன்றின் ஆயுள் காலத்துக்குள், பிரச்சினைகளைத் தீர்ப்பது சாத்தியமில்லை: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔13.Jan 2019

அரசியலில் ஆரம்பத்தில் எமது எதிரியாக இருந்த ஏ.ஆர். மன்சூர், இறுதிக் காலத்தில் எமது கட்சியுடன் இணைந்து பல்வேறு ஆலோசனைகளை வழங்குபவராக மாறினார். அவருடைய அரசியல் அனுபவங்களும், ஆலோசனைகளும் எமது கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு உரமூட்டுவதாக அமையும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப்

மேலும்...
வாழ்வாதார உதவிகளை, கொழும்பில் றிசாட் வழங்கி வைத்தார்

வாழ்வாதார உதவிகளை, கொழும்பில் றிசாட் வழங்கி வைத்தார் 0

🕔13.Jan 2019

– அஷ்ரப் ஏ சமத் –கொழும்பு வடக்கு பிரதேசத்தில் அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பல்வேறு அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதோடு, வாழ்வாதார உதவிகளும் வழங்கப்பட்டன.இதற்கமைய மேல்மாகாண  சபை உறுப்பினர் மொஹமட் பாயிஸின் நிதி ஒதுக்கீட்டில் செப்பனிடப்பட்ட மட்டக்குழி கதிரவன் வீதியை அமைச்சர் றிசாட் திறந்து வைத்தார்.அத்துடன் கொழும்பு வடக்கு பிரதேசத்தில் வறுமைக்

மேலும்...
ஜனாபதிபதித் தேர்தலுக்கு முன்னர், மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும்: ஜனாதிபதி தெரிவிப்பு

ஜனாபதிபதித் தேர்தலுக்கு முன்னர், மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும்: ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔13.Jan 2019

ஜனாதிபதி தேர்தல் பற்றி பல்வேறு கதைகளைக் கூறி, நடைபெறவேண்டியுள்ள மாகாண சபை தேர்தலை பிற்போடுவதற்கு சிலர் முயற்சித்து வருவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  தெரிவித்தார். “தற்போது 06 மாகாண சபைகளின் நடவடிக்கைகள் செயலிழந்த நிலையில் உள்ளன. இது ஜனநாயகத்துக்கு ஒருபோதும் நல்லதல்ல. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்களுக்கும் இது முரணானதாகும்” என்றும் அவர்

மேலும்...
நான்கு பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக்குவதற்கு, ஆளுநர் ஹிஸ்புல்லா அனுமதி

நான்கு பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக்குவதற்கு, ஆளுநர் ஹிஸ்புல்லா அனுமதி 0

🕔13.Jan 2019

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலுள்ள நான்கு பாடசாலைகளை, தேசிய பாடசாலைகளைாகத் தரமுயர்த்துவதற்கு, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நடவடிக்கை எடுத்துள்ளார். வாழைச்சேனை இந்துக் கல்லூரி, செங்கலடி மகா வித்தியாலயம், களுதாவளை மகா வித்தியாலயம் மற்றும் பொத்துவில் மத்திய கல்லூரி ஆகியவற்றினையே, தரமுயர்த்துவதற்கு ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.இதற்கமைய குறித்த பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த தேவையான

மேலும்...
ஜனாதிபதி வேட்பாளர் யார்; மஹிந்த, மைத்திரி தரப்பிடையே கருத்து வேறுபாடு: மீண்டுமொரு பிளவை உருவாக்குமா?

ஜனாதிபதி வேட்பாளர் யார்; மஹிந்த, மைத்திரி தரப்பிடையே கருத்து வேறுபாடு: மீண்டுமொரு பிளவை உருவாக்குமா? 0

🕔13.Jan 2019

இந்த வருட இறுதியில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும்  ஜனாதிபதி தேர்தலில்,  ஐக்கிய தேசிய முன்னணி சார்பான வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடும் பொதுவேட்பாளர் யார் என்பது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்புக்கும் மஹிந்த ராஜபக்ஷ தரப்புக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் தோன்றியுள்ளன. 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி

மேலும்...
நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் கிடைத்தால் மட்டுமே, அதிகாரப் பரவலாக்கல் அர்த்தமுள்ளதாகும்: ஹசன் அலி

நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் கிடைத்தால் மட்டுமே, அதிகாரப் பரவலாக்கல் அர்த்தமுள்ளதாகும்: ஹசன் அலி 0

🕔13.Jan 2019

– மப்றூக் –முஸ்லிம் பெரும்பான்மை மாகாணமொன்று  கிழக்கில் நிலத்தொடர்பற்ற முறையில் கிடைத்தால் மட்டுமே, அதிகாரப் பரவலாக்கல் என்பது அர்த்தமுள்ளதாக இருக்கும் என, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசன் அலி தெரிவித்தார். நிலத் தொடர்பற்ற வகையில் இந்தியாவிலுள்ள பாண்டிச்சேரி மானில அமைப்பை ஒத்ததாக, முஸ்லிம்களுக்குரிய பெரும்பான்மை மாகாணம் அமைய

மேலும்...
பிரதமர் ரணிலின் படத்தைக் காட்சிப்படுத்துமாறு, மைத்திரி உத்தரவு

பிரதமர் ரணிலின் படத்தைக் காட்சிப்படுத்துமாறு, மைத்திரி உத்தரவு 0

🕔13.Jan 2019

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் புகைப்படத்தை மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் உடனடியாக காட்சிப்படுத்துமாறு, மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராகப் பதவியேற்றுள்ள மைத்திரி குணரத்ன உத்தரவிட்டுள்ளார். தன்னுடைய கடமைகளை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்ற போதே அவர் இந்த உத்தரவை வழங்கினார். ஆளுநர் அலுவலகத்தில் ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஆளுநரின் புகைப்படங்கள் உள்ள நிலையில், அங்கு பிரதமரின்

மேலும்...
2005 – 2015 காலத்தை மறக்கவில்லை: மைத்திரிக்கு சந்திரிகா கடிதம்

2005 – 2015 காலத்தை மறக்கவில்லை: மைத்திரிக்கு சந்திரிகா கடிதம் 0

🕔13.Jan 2019

இலங்கையில் இறுதியாக இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான மக்களால் நிராகரிக்கப்பட்ட தரப்புடன் கூட்டுச்சேரும் சிறிசேனவின் முடிவை, தான் ஆதரிக்கவில்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க  தெரிவித்துள்ளார். 2015 ஜனவரி 08 ம் திகதி கொள்கைகளிற்கு தான் துரோகமிழைக்கப்போவதில்லை எனவும், அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
சமஷ்டி இருந்தால் ஆதரவில்லை: ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி

சமஷ்டி இருந்தால் ஆதரவில்லை: ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி 0

🕔12.Jan 2019

அரசியலமைப்பின் உத்தேச வரைபில் சமஷ்டிக்கான தன்மைகள் உள்ளடக்கப்படுமாயின், அதற்கு தாங்கள் ஆதரவளிக்கப் போவதில்லையென, ஐக்கிய தேசிய கட்சியின் பின் ஆசன நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து வெளிட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சமிந்த விஜேசிறி; தற்போது முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச அரசியலமைப்பு வரைபில் ஒருமித்த நாடு என்ற வார்த்தைக்கு தெளிவான பொருள் விளக்கம் அளிக்கப்பட வேண்டுமென்று

மேலும்...
136,714 பேருக்கு இம்முறை பல்கலைக்கழக அனுமதி இல்லை

136,714 பேருக்கு இம்முறை பல்கலைக்கழக அனுமதி இல்லை 0

🕔12.Jan 2019

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் நுழைவதற்கான தகுதியினைப் பெற்றுக் கொண்டவர்களில் 01 லட்சத்து 36 அயிரத்து 714  பேர், பல்கலைக்கழக அனுமதியினை இழந்துள்ளனர். இம்முறை க.பொ.த. உயர்தரத்தில் சித்தியடைந்து, பல்கலைக்கழகம் நுழைவதற்கான தகுதியினைப் பெற்றவர்களில் 31,158 பேருக்கு மட்டுமே, இலங்கையிலுள்ள 15 பல்கலைக்கழகங்களிலும் அனுமதி வழங்கப்படும் என்று, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2018இல்

மேலும்...
ஹர்த்தாலுக்கு டயர் எரித்தவர்கள் கைது

ஹர்த்தாலுக்கு டயர் எரித்தவர்கள் கைது 0

🕔12.Jan 2019

வீதியில் டயர் எரித்த குற்றச்சாட்டில், இளைஞர்கள் இருவரை காத்தான்குடி பொலிஸார் நேற்று வைள்ளிக்கிழமை கைது செய்தனர். நாவற்குடா பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் , 23 வயதுடைய இரு இளைஞர்களே, இவ்வாறு கைது செய்யப்பட்டனர். கிழக்கு மாகாண ஆளுநராக எம். ஹஸ்புல்லா நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நேற்று வெள்ளிக்கிழமை தமிழர்கள் தரப்பில் ஹர்த்தால் மேற்கொள்ளும்

மேலும்...
புலிகள் இயக்க உறுப்பினர்கள் இருவருக்கு 185 வருட கடூழிய சிறை

புலிகள் இயக்க உறுப்பினர்கள் இருவருக்கு 185 வருட கடூழிய சிறை 0

🕔11.Jan 2019

இலங்கை பாதுகாப்புப் படையினர் 37 பேரை கொலை செய்தமை தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் இருவருக்கு, 185 வருட கடூழிய சிறைத்தண்டனையை விதித்து அநூராதபுரம் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அநூராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராசதுறை ஜெகன்

மேலும்...
உப்புக்குளம் மீள்குடியேற்ற வீட்டுத் திட்டத்தை, அமைச்சர் றிசாட் திறந்து வைத்தார்

உப்புக்குளம் மீள்குடியேற்ற வீட்டுத் திட்டத்தை, அமைச்சர் றிசாட் திறந்து வைத்தார் 0

🕔11.Jan 2019

மன்னார் மாவட்டத்தின் உப்புக்குள கிராமத்தில் மீள்குடியேற்றத்துக்கென நிர்மாணிக்கப்பட்ட வீடமைப்புத் தொகுதியை இன்று வெள்ளிக்கிழமை அமைச்சர் றிசாட் பதியுதீன் திறந்து வைத்து மக்களிடம் கையளித்தார்.உப்புக்குள கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் கற்பிட்டியில் சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் உப்புக்குள மக்களின் மீள்குடியேற்றத்திற்கென இந்த வீட்டுத் திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில் மற்றும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்