சமஷ்டி இருந்தால் ஆதரவில்லை: ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி
அரசியலமைப்பின் உத்தேச வரைபில் சமஷ்டிக்கான தன்மைகள் உள்ளடக்கப்படுமாயின், அதற்கு தாங்கள் ஆதரவளிக்கப் போவதில்லையென, ஐக்கிய தேசிய கட்சியின் பின் ஆசன நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கருத்து வெளிட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சமிந்த விஜேசிறி; தற்போது முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச அரசியலமைப்பு வரைபில் ஒருமித்த நாடு என்ற வார்த்தைக்கு தெளிவான பொருள் விளக்கம் அளிக்கப்பட வேண்டுமென்று கூறினார்.
அத்துடன், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள உத்தேச அரசியலமைப்புக்கு ஏற்ப, புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமானால், அதற்கு ஆதரவளிக்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.