2005 – 2015 காலத்தை மறக்கவில்லை: மைத்திரிக்கு சந்திரிகா கடிதம்

🕔 January 13, 2019

லங்கையில் இறுதியாக இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான மக்களால் நிராகரிக்கப்பட்ட தரப்புடன் கூட்டுச்சேரும் சிறிசேனவின் முடிவை, தான் ஆதரிக்கவில்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க  தெரிவித்துள்ளார்.

2015 ஜனவரி 08 ம் திகதி கொள்கைகளிற்கு தான் துரோகமிழைக்கப்போவதில்லை எனவும், அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்களிற்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான தலைமைத்துவத்தை வழங்குமாறு, ஜனாதிபதி மைத்திரியை முன்னாள் ஜனாதிபதி அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

“2005 முதல் 2015ஆம் ஆண்டு வரை, இந்த நாட்டில் காணப்பட்ட லஞ்சம் ஊழல்  மற்றும் வன்முறைகளின் அளவை நான் இன்னமும் மறக்கவில்லை. ஜனவரி 2015ஆம் ஆண்டு மிகதீவிரமாக இடம்பெற்ற தேர்தல் மோதலில் மக்கள் அந்த குழுவினரை நிராகரித்ததை நான் மறந்துவிடவில்லை” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்