ஜனாதிபதித் தேர்தல்தான் அடுத்து நடைபெறும்: ஐ.தே.கட்சி செயலாளர் அகிலவிராஜ் காரியவசம்
நாட்டில் அடுத்ததாக ஜனாதிபதித் தேர்தலொன்று நடைபெறுவதற்கே அதிக சந்தர்ப்பம் உள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அந்தத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறுவது 500 சதவீரம் உறுதியாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நிகவரெட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்று, எதிர்வரும் 10 ஆண்டுகளுக்கு ஆட்சியமைக்கும் என்றும் அவர் இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்.
எவ்வாறாயினும், மாகாண சபைத் தேர்தல்தான் அடுத்து நடைபெறும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.