பிரதமர் ரணிலின் படத்தைக் காட்சிப்படுத்துமாறு, மைத்திரி உத்தரவு

🕔 January 13, 2019

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் புகைப்படத்தை மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் உடனடியாக காட்சிப்படுத்துமாறு, மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராகப் பதவியேற்றுள்ள மைத்திரி குணரத்ன உத்தரவிட்டுள்ளார்.

தன்னுடைய கடமைகளை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்ற போதே அவர் இந்த உத்தரவை வழங்கினார்.

ஆளுநர் அலுவலகத்தில் ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஆளுநரின் புகைப்படங்கள் உள்ள நிலையில், அங்கு பிரதமரின் புகைப்படம் காட்சிப்படுத்தப்படவில்லை.

இதனையடுத்தே, பிரதமரின் படத்தையும் காட்சிப்படுத்துமாறு, ஆளுநர் மைத்திரி உத்தரவிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்