வட்டிப் பணத்தில் வீடமைப்பு: பைசல் காசிம் தரப்பு முன்னுக்குப் பின், முரணாக பேசுவதாக குற்றச்சாட்டு

🕔 January 18, 2019
 – எம்.ஏ.எம். முர்ஷித் –

நிந்தவூரில் ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் முயற்சியால் அமைக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் வீடமைப்புத் திட்டம் குறித்து, முன்னுக்குப் பின் முரணான தகவல்களை, அமைசர் தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோக பூர்வ சுற்றறிக்கையின் படி, “SCATTERED SUBSIDY HOUSING SCHEME ” எனப் படுவது பயனாளிகளின் நிலத்தில் கட்டி நிறைவு செய்யப்பட்டாமலிருக்கும் (கொத்தும் குறையுமான) வீடுகளை பூர்த்தி செய்வதற்கு அரசு வழங்கும் மானியம் மற்றும் வட்டியுடனான கடன் சேவையாகும்.

இதனையே நிந்தவூரில் நடைமுறைப்படுத்த இருப்பதாக சொல்லிவிட்டு, இப்போது வீடமைப்புக்காக மக்களுக்கு வழங்கப்படும் நிதி, முழுக்க முழுக்க இலவசம் என முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சியை ராஜாங்க அமைச்சர் தரப்பு மேற்கொள்கிறது.

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அமைக்கப்படவிருப்பதாக சொல்லப்படும் வீட்டுத்திட்டம் தொடர்பில்  கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையிலும், அமைச்சரின் ஊடகப்பிரிவின் செய்திகளின் அடிப்படையிலும், உரிய திட்டம் எதுவித குளறுபடியுமின்றி ஏழை எளிய மக்களுக்கு சென்றடைய வேண்டும் எனும் எண்ணத்துடன் ஒரு ஆக்கத்தை எழுதியிருந்தேன்.

குறித்த விடயம் தொடர்பில் அடிப்படை அறிவுள்ள அனைவரும், நான் எழுதியதிலிருந்து அத் திட்டத்தின் சாதக பாதகங்களைப் புரிந்து கொண்டனர்.

இருப்பினும் மு.காங்கிரசைச் சேர்ந்த சிலர், எனது கருத்துகளை பொய்ப்பிக்கும் நோக்கில் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். அதில் முதுகெலும்பு இல்லாத சிலர் என்னை தனிப்பட்ட முறையில் தாக்கும் நோக்கில், தங்கள் போலி முகநூல்களை பயன்படுத்தி வன்மங்களை வெளிக்காட்டினர்.

அதனைத் தொடர்ந்து ராஜாங்க அமைச்சரின் முகநூல் பக்கமும், வழமை போல பூசி மெழுகும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோக பூர்வ சுற்றறிக்கையின் படி “SCATTERED SUBSIDY HOUSING SCHEME ” எனப் படுவது பயனாளிகளின் நிலத்தில் கட்டி நிறைவு செய்யப்பட்டாமலிருக்கும் (கொத்தும் குறையுமாக) வீடுகளுக்கு அரசு வழங்கும் மானியம் மற்றும் வட்டியுடனான கடன் சேவையாகும்.

இதனையே நிந்தவூரில் நடைமுறைப்படுத்த இருப்பதாக சொல்லிவிட்டு, இப்போது முழுக்க முழுக்க இலவசம் என முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சி இடம்பெறுகிறது.

அது தொடர்பில் மிகவும் தெளிவாக http://www.nhda.lk/index.php/en/2016-07-29-09-54-47/sampath-sevana-loan-recoveries-for-housing?fbclid=IwAR0xNKUxANNpfTX8Nv352zEqsraY5MbHoaleJ9w4jlC7BMjnz_PkkiSkeL0 எனும், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகபூர்வ பக்கத்திற்கு சென்று தெளிவாக வாசிக்க முடியும்.

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் சுற்றறிக்கையின் படி “GAMUDAWA” எனப்படும் திட்டமே முழு மானிய வீடமைப்பு திட்டமாகும்.

இது அரச காணியில் சுமார் 200 வீடுகளைக்கொண்ட மாதிரி கிராமிய வீட்டுத்திட்டமாக அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும்.

அது தொடர்பில் மிகவும் தெளிவாக http://www.nhda.lk/index.php/en/2016-07-29-09-54-47/uda-gammana-model-village-programme?fbclid=IwAR1RO-yiDsDn9j1xhern30Ju36z3jIStYlTjXBazsQVn4Ke5-62GnGexpdk எனும் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகபூர்வ பக்கத்திற்கு சென்று வாசிக்க முடியும்.

எனவே, ராஜாங்க அமைச்சர் அவர்களே; மக்களுக்கு பயன் தரக்கூடிய நல்ல திட்டங்களை வரவேற்கிறோம். ஆனால் மக்களை மடையர்களாக்கும் பொய் பிரச்சாரங்கள் தொட்பிலேயே விமர்சனங்களை முன்வைக்கின்றோம்.

மேலே தரப்பட்டுள்ள, வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகபூர்வ இணையத்தரளத்தின் சுட்டியும் அது சொல்லும் தகவல்களும் பொய் என்றால்; நாம் சுட்டிக்காட்டிய சுற்றறிக்கை சொல்லும் விடயங்கள் தவறு என்றால் உண்மையானதைக் கூறுங்கள்.

எமது நோக்கம் உங்களுடைய திட்டத்தினை குழப்பியடிப்பதல்ல; ஆனால் மக்களின் தலையைத் தடவி கண்ணைப் பிடுங்குவதற்கு அனுமதிக்க முடியாது.

தொடர்பான செய்திகள்: 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்