வைத்தியசாலையில் கைவிடப்பட்ட மாற்றுத் திறனாளி சிறுவனை, அடையாளம் காண உதவுங்கள்
தம்பதெனிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் கைவிடப்பட்ட சிறுவன் ஒருவரை அடையாளம் காணுமாறு கோரப்படுகிறது.
இந்த சிறுவனை கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் திகதி, வைத்தியசாலையில் நபரொருவர் அனுமதித்ததாகவும், அவர் தன்னைப்பற்றி போலியான தகவல்களை வைத்தியசாலைக்கு வழங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்த நிலையில் ஒருநாள் மட்டும், வைத்தியசாலையில் சிறுவனுடன் தங்கிய மேற்படி நபர், பின்னர் எதுவித அறிவித்தலுமின்றி சிறுவனை கைவிட்டுச் சென்றுள்ளார்.
மாற்றுத் திறனாளியான இந்த சிறுவன் பேச்சாற்றல் குறைந்தவர் என்பதோடு, தன்னைப் பற்றிய முழுமையான விபரங்களை வழங்குவதற்கு முடியாதவராகவும் உள்ளார்.
எனவே, இந்தச் சிறுவனைப் பற்றிய விபரம் தெரிந்தவர்கள், தம்பதெனிய ஆதார வைத்தியசாலையிலுள்ள ரி. ஹிஸான் என்பவரை தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகிறார்கள்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலங்கங்கள்: 0716734696 அல்லது 0719189359