அழகிய மாகாணமாக்குவோம்; போஸ்டர் மற்றும் பதாதைகளை அகற்ற, ஆளுநர் உத்தரவு
– அஹமட் –
மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து சுவர்களிலும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் மற்றும் அனுமதி பெறப்படாமல் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதைகளை அகற்றுமாறு, உரிய அதிகாரிகளுக்கு மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரட்ன உத்தரவிட்டுள்ளார்.
இதனை, தனது பேஸ்புக் பக்கத்தில் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
மேலும், போஸ்டர்களை ஒட்டுதல் மற்றும் அனுமதி பெறாமல் பதாதைகளைக் காட்சிப்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், பொலிஸாருக்கு ஆளுநர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, ‘நாம் எல்லோரும் சேர்ந்து மத்திய மாகாணத்தை அழகானதாக ஆக்குவோம்’ எனவும், மத்திய மாகாண ஆளுநர், தனது பேஸ்புக் பக்கத்தின் ஊடாக அழைப்பு விடுத்துள்ளார்.