‘மனமுடைந்ததால்’ இறந்துபோன பொமரேனியன் நாய்க்குட்டி

🕔 January 21, 2019

மூக ஊடகத்தில் பிரபலமான உலகின் அழகான நாய்க்குட்டி என்று அறியப்பட்ட பூ (Boo) தனது 12 வயதில் இறந்துவிட்டது.

பூ-வின் நெருங்கிய நண்பனான பட்டி (Buddy) 2017ஆம் ஆண்டு இறந்ததில் இருந்து, பூ “மனம் உடைந்து” காணப்பட்டதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

அந்த நாய்க்குட்டியின் அதிகாரப்பூர்வமான ஃபேஸ்புக் பக்கத்தில்,”பட்டி எங்களை விட்டுச் சென்றதில் இருந்து அவனது மனம் முற்றிலும் உடைந்து விட்டது என்று நினைக்கிறோம்” என்று எழுதப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக்கில் பூ-வை 16,000 பேர் பின்தொடர்ந்தனர். தொலைக்காட்சிகளிலும் தோன்றிய இந்த நாய்க்குட்டி, Boo – the life of the world’s cutest dog என்ற புத்தகத்தையும் வெளியிட்டது.

பூ – வும் அதன் நண்பர் பட்டி – யும் 11 ஆண்டுகள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தனர். தனது 14 வயதில் செப்டம்பர் 2017ல் பட்டி உயிரிழந்தது.

அமெரிக்காவை சேர்ந்த இதன் உரிமையாளர்கள், உறக்கத்திலேயே பூ இறந்துவிட்டதாகவும், இதனால் அவர்கள் மிகுந்த வருத்தத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

“ஆனால், பூ இனி வலியோடு இருக்க மாட்டான் என்று நினைப்பது சற்று ஆறுதல் தருகிறது. வானவில்லின் மறுபக்கத்தில் பட்டிதான் முதலில் பூவை வரவேற்பான் என்று எங்களுக்கு தெரியும்” என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

“பூ… நாங்கள் உன் மீது நிறைய அன்பு வைத்துள்ளோம். நீ இங்கு இல்லாதது எங்களுக்கு வருத்தமே. என்றாவது சந்திப்போம்… பட்டியுடன் எப்போதும் போல குறும்பு செய்து கொண்டு மகிழ்ச்சியாக இரு” என்றும் அதன் உரிமையாளர்கள் எழுதியுள்ளனர்.

பூ (Boo) – புத்தகத்தை வெளியிடும்போது, பல அமெரிக்க பிரபலங்களை சந்தித்துள்ளது.

இந்த நாய்க்குட்டி தங்கள் வாழ்வில் கடினமான நேரங்களில் சிறு மகிழ்ச்சி தந்து உதவியதாக அதனை பின்தொடர்ந்தவர்கள் பதிவிட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்