வவுனியாவில் குழாய் நீர் கிணறுகளை, காதர் மஸ்தான் வழங்கினார்
குடிநீரின்றி சிரமப்படும் வவுனியாவிலுள்ள கிராமங்களுக்கு ஐ.எஸ்.ஆர்.ஸி நிறுவனத்தின் அனுசரணையில் குழாய்க் கிணறுகளை நிர்மாணித்து, சூரிய சக்தி (Solar power) மூலம் மின்சாரம் பெற்று தாங்கிகளுக்கு நீரேற்றி வழங்கும் தொகுதிகளை அமைத்து நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் நேற்று வியாழக்கிழமை வழங்கினார்.
ஆசிகுளம், புதுக்குளம், அம்பலாங்கொடல்ல, எட்டமேகஸ்கட, கணே சபுரம், மேனிக்பாம் மற்றும் பாவற்குளம்,மணிபுரம் பகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று, இந்த குழாய் கிணறுகள் வழங்கப்பட்டன.
ஒவ்வொன்றும் ஏழரை லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மேற்படி கிணற்றுத் தொகுதிகளில் நிர்மாணிப்பு பணிகள் முடிந்தவையே இவ்வாறு கையளிக்கப்பட்டன.
ஏனைய கிணறுகளின் நிர்மாணிப்புப் பணிகள் பூர்த்தி அடைந்தவுடன் அவையும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்.
இந் நிகழ்வில் ஐ.எஸ்.ஆர்.ஸி. நிறுவுனர் மிஹ்லார் உள்ளிட்டோரும் இணைந்து கொண்டனர்.
ஆசிகுளம், புதுக்குளம், அம்பலாங்கொடல்ல, எட்டமேகஸ்கட, கணே