பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே சிறந்தது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்
பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே சிறந்தது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை அவர் இது தொடர்பாக கருத்து வெளியிட்டார்.
தற்போது நடைமுறையில் இல்லாத புதிய முறைமையில் தேர்தலை நடத்துவதை விட, பழைய முறைப்படித் தேர்தலை நடத்துவதே சிறந்தது என்று அவர் கூறினார்.
தேர்தல் நடத்தப்படாமல், காலதாமதமாகின்றமை குறித்து தான் கவலையடையவில்லை என்றும், ஆனால், மக்களுடைய வாக்குரிமை இல்லாது போவது குறித்து தான் தனிப்பிட்ட ரீதியில் கவலையடைவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.