புலிகளின் முன்னாள் உறுப்பினர், ஆயுதங்களுடன் கைது
விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை ஆயுதங்களுடன் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை பளை பிரதேசத்தில் வைத்துக் கைது செய்துள்ளனர்.
பயங்கரவாத தடுப்புப் பிரிவின் வவுனியா உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து ஒரு பிஸ்டர், ‘ஷொட் கன்’ துப்பாக்கியொன்று, 126 துப்பாக்கி ரவைகள், வாள்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.
மேற்படி சந்தேக நபர், விடுதலைப் புலிகள் அமைப்பின் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் உறுப்பினர் என, விசாரணைகளிலிருந்து தெரிய வருகிறது.