
இலங்கையில் அடுத்த ஆண்டு அறிமுகமாகவுள்ள சொத்துவரியில், ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வைத்திருப்போரில் – ஒரு வீட்டுக்கு மாத்திரமே வரிவிலக்கு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (18) அவர் விசேட உரையாற்றிய போது, இந்த விடயத்தை கூறினார்.
“சொத்துக்கள் மீதான வரி அமுலாக்கப்படும்போது, ஒரு நபர் பல வீடுகளைக் கொண்டிருந்தால் – அவற்றில் ஒரு வீட்டுக்கு மாத்திரமே வரிவிலக்கு வழங்கப்படும்.
இதன்மூலம் 90 சதவீதமானவர்களுக்கு வரி அமுலாக்கப்படாது.
எனவே இது தொடர்பாக நாட்டின் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.



