ஹஜ் யா்திரீகர்கள் 550 பேர் வெப்பம் காரணமாக உயிரிழப்பு: அதிகமானோர் எகிப்தியர்கள்

🕔 June 19, 2024

ஜ் கடமையின் போது குறைந்தது 550 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்படுகிறது,

இறந்தவர்களில் குறைந்தது 323 பேர் எகிப்தியர்களாவர். அவர்களில் பெரும்பாலோர் வெப்பம் தொடர்பான நோய்களுக்கு ஆளாகியுள்ளனர்.

மக்காவின் சுற்றுப்புறத்திலுள்ள அல்-முயிசெம் பகுதியில் அமைந்துள்ள வைத்தியசாலையின் பிரேத அறையில் இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ளன.

ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த 60 பேர் – இறந்தவர்களில் அடங்குகின்றனர்.

முன்னதாக செவ்வாயன்று, எகிப்தின் வெளியுறவு அமைச்சகம், ஹஜ்ஜின் போது காணாமல் போன எகிப்தியர்களைத் தேடும் நடவடிக்கைகளில் சஊதி அதிகாரிகளுடன் இணைந்து ஈடுபட்டது.

இதேவேளை, வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட 2,000 க்கும் மேற்பட்ட யாத்ரீகர்களுக்கு சவூதியில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது,

ஆனாலும் ஞாயிற்றுக்கிழமை முதல் வெப்பத்தால் நோயுற்றோர் மற்றும் மரணித்தோர் எண்ணிக்கையை புதுப்பிக்கவில்லை.

கடந்த ஆண்டு ஹஜ் யாத்திரீகர்கள் 240 பேர் உயிரிழந்தனர். அவர்களில் அதிகமானோர் இந்தோனேசியர்களாவர்.

திங்களன்று மக்கா – கஃபதுல்லா பள்ளிவாசலில் வெப்பநிலை 51.8 செல்சியஸை எட்டியதாக சஊதி தேசிய வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டு சுமார் 1.8 மில்லியன் யாத்ரீகர்கள் ஹஜ்ஜில் பங்கேற்றனர், அவர்களில் 1.6 மில்லியன் பேர் வெளிநாட்டிலிருந்து வந்ததாக சஊதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்