15 – 25 வயதினர்களிடையே எச்.ஐ.வி தொற்று கணிசமாக அதிகரிப்பு

🕔 June 18, 2024

தினைந்து தொடக்கம் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று கணிசமாக அதிகரித்துள்ளதை அடுத்து, இலங்கை சுகாதார அதிகாரிகள் சோதனை முயற்சிகளை முடுக்கிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எச்.ஐ.வி தொற்று காரணமாக – மேல் மாகாணம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக ஆண்களிடையே தொற்று அதிகரித்துள்ளதாகவும் தேசிய பாலியல் நோய்/எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் ஆலோசகர் டொக்டர் வினோ தர்மகுலசிங்க கூறியுள்ளார்.

இந்தப் போக்கை எதிர்த்துப் போராடுவதற்கு விரிவான தலையீடுகள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டில், ஒரு மில்லியனுக்கும் அதிகமான எச்.ஐ.வி சோதனைகள் நடத்தப்பட்டன. இதன்போது கணிசமான எண்ணிக்கையில் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர்.

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 207 புதிய எச்ஐவி/எய்ட்ஸ் நோயாளிகள் கண்டறியப்பட்டனர். இதேவேளை 13 பேர் உயிரிழந்தனர். இது 2023 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தை விடவும் 25% அதிகரிப்பைக் காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்