மாலக சில்வாவுக்கு எதிரான பிடியாணை மீளப் பெறப்பட்டது

🕔 January 19, 2018

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக சில்வாவுக்கு எதிரான பிடியாணையினை கொழும்பு மேலதிக நீதவான் தர்ஷிக விமலசிறி மீளப் பெற்றுள்ளார்.

சந்தேக நபர் மாலக சில்வா, இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் சரணடைந்ததோடு, வைத்தியச் சான்றினையும் சமர்ப்பித்தமையினை அடுத்தே, அவருக்கு எதிரான பிடியாணை மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டது.

கடந்த நீதிமன்ற அமர்வொன்றின் போது, மாலக சில்வா ஆஜராகியிருக்க வேண்டிய போதிலும், அவர் வருகை தந்திருக்கவில்லை. அதனால், அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

ஸ்கொட்லாந்து தம்பதியினர் மீது 2014ஆம் ஆண்டு, இரவு நேர களியாட்ட விடுயொன்றில் வைத்து, மாலக சில்வா தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கிலே, இவர் ஆஜராகாமல் போயிருந்தார்.

இந்த நிலையில், மாலக சில்வா இன்று நீதிமன்றில் ஆஜராகிய போதும், குறித்த வழக்கு விசாரணை மார்ச் 06ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்