விபச்சாரத்தில் ஈடுபட்ட மூன்று தாய்லாந்து பெண்கள் உட்பட 13 பேர் பேர் கைது

🕔 June 1, 2016

Brothel raid - 089தாய்லாந்து பெண்கள் மூவர் உட்பட 13 பெண்களை பாணந்துறை பொலிஸ் நிலையத்தின் விபசாரத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

தலவத்துக்கொடயிலுள்ள இரண்டு மாடி வீடொன்றில், பெண்ணொருவரினால் ஆயுர்வேத மசாஜ் நிலையம் எனும் போர்வையில் நடத்தப்பட்டு வந்த விபச்சார நிலையமொன்றிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட தாய்லாந்துப் பெண்கள் 30 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். இவர்கள், சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வந்துள்ளனர்.

ஏனைய பெண்கள் 09 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் 18 தொடக்கம் 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் பண்டாரகம, கம்பஹா, அனுராதபுரம், ரத்தினபுரி மற்றும் வியாங்கொட பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

தனியார் வானொலி நிலையமொன்று வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே விசாரணகள் இடம்பெற்றதாகவும், இதனையடுத்து கடுவெல நீதவான் நீதமன்றத்திடமிருந்து பெற்றுக்கொண்ட உத்திரவின் பேரில் முற்றுகை நடந்ததாகவும் சிரேஸ்ட பொலில் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

பொலிஸ் உளவாளியொருவர் மேற்படி தாய்வான் பெண் ஒருவருக்கு 08 ஆயிரம் ரூபாய் செலுத்தி, அவரை அறையொன்றுக்குள் அழைத்துச் சென்றபோது இந்தக் கைது இடம்பெற்றது.

வாடிக்கையாளர்களைப் பொறுத்து, 05 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை, குறித்த பெண்கள் அறவிட்டு வந்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்