Back to homepage

Tag "மதம்"

மத ரீதியான வெறுப்புப் பதிவுகள் குறித்து விசாரிக்க பிரத்தியேக குழு நியமனம்: முறைப்பாடளிக்க தனியான தொலைபேசி இலக்கம்

மத ரீதியான வெறுப்புப் பதிவுகள் குறித்து விசாரிக்க பிரத்தியேக குழு நியமனம்: முறைப்பாடளிக்க தனியான தொலைபேசி இலக்கம் 0

🕔14.Dec 2023

மத ரீதியான வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் – சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இது தொடர்பான குற்றங்களை விசாரிப்பதற்காக – பிரத்தியேகமான குழுவொன்றை உருவாக்குமாறு பொலிஸ் கணினி குற்றப்பிரிவுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உத்தரவு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
குர்ஆன் எரிப்புக்கு ஜனாதிபதி ரணில் கண்டனம்: கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் அமையின்மைக்கு இடமளிக்க வேண்டாம் எனவும் கோரிக்கை

குர்ஆன் எரிப்புக்கு ஜனாதிபதி ரணில் கண்டனம்: கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் அமையின்மைக்கு இடமளிக்க வேண்டாம் எனவும் கோரிக்கை 0

🕔12.Jul 2023

சுவீடனில் புனித குர்ஆன் எரிக்கப்பட்டதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, “கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் அமைதியின்மைக்கு இடமளிக்க வேண்டாம்” என்றும், தெற்கின் பூகோள விழுமியங்களுக்கு மதிப்பளிக்குமாறும் மேற்கத்தேய நாடுகளைக் கேட்டுக் கொண்டார். இரத்தினபுரி புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதியை நேற்று (11) பிற்பகல் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி

மேலும்...
மதங்களை இழிவுபடுத்துகின்றமை குறித்து ஆராய, குழுவொன்றை நியமிக்க தீர்மானம்

மதங்களை இழிவுபடுத்துகின்றமை குறித்து ஆராய, குழுவொன்றை நியமிக்க தீர்மானம் 0

🕔27.Jun 2023

மத சுதந்திரத்தை பறிக்கும் மற்றும் மதங்களை இழிவுபடுத்தும் சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று (26) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக, தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. பௌத்த, இஸ்லாமிய, இந்து மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள், சட்ட

மேலும்...
சிறுபான்மையினரைக் குறிவைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில், சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு கண்டனம்

சிறுபான்மையினரைக் குறிவைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில், சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு கண்டனம் 0

🕔19.Mar 2021

இன, மத ரீதியான வன்முறைகளைத் தூண்டிய குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்படுவோருக்கு புனர்வாழ்வளிப்பது தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் உள்ளடக்கங்கள் சிறுபான்மை சமூகங்களை இலக்குவைக்கும் வகையில் அமைந்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு, அதனைக் கடுமையாகக் கண்டித்துள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலின் உள்ளடக்கங்கள் தொடர்பில் சர்வதேச யூரர்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையிலேயே இந்தக் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும்...
இனம், மதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகளை பதிவதில் சிக்கல்; ஏற்கனவே உள்ள பெயர்களை மாற்றவும் யோசனை

இனம், மதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகளை பதிவதில் சிக்கல்; ஏற்கனவே உள்ள பெயர்களை மாற்றவும் யோசனை 0

🕔18.Mar 2021

மதம் மற்றும் இனத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகளை எதிர்வரும் காலங்களில் பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இனம் மற்றும் மதத்தின் அடிப்படையில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகளின் பெயர்களை மாற்றுவது தொடர்பிலும் தேசிய

மேலும்...
கொரோனாவை மத ரீதியாக அணுகக் கூடாது: உலக சுகாதார அமைப்பு வலியுத்தல்

கொரோனாவை மத ரீதியாக அணுகக் கூடாது: உலக சுகாதார அமைப்பு வலியுத்தல் 0

🕔8.Apr 2020

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை மதம், இனம் எனும் அடிப்படையில்அணுகக்கூடாது என உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியாவில் மத ரீதியாக நடத்தப்பட்ட ஒன்று கூடலொன்றில் கலந்து கொண்டவர்களால் கொரோனா பரவியமை குறித்து உலக சுகாதார அமைப்பின் (அவசரகால திட்டங்கள்) பணிப்பாளர் மைக் ரயானிடம் ஊடக சந்திப்பொன்றில் கேட்கப்பட்ட போதே, அவர் மேற்படி விடயத்தைக் கூறினார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்