மதங்களை இழிவுபடுத்துகின்றமை குறித்து ஆராய, குழுவொன்றை நியமிக்க தீர்மானம்

🕔 June 27, 2023

த சுதந்திரத்தை பறிக்கும் மற்றும் மதங்களை இழிவுபடுத்தும் சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (26) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக, தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

பௌத்த, இஸ்லாமிய, இந்து மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள், ஊடகங்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் இந்தக் குழுவில் நியமிக்கப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மத சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், மத போதனைகளை அவதூறு செய்வதைத் தடுக்கவும் சட்ட விதிகளை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்த உண்மைகளை ஆராய்ந்து பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்பிப்பதற்கான குழுவொன்றை நியமிப்பதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்