மத ரீதியான வெறுப்புப் பதிவுகள் குறித்து விசாரிக்க பிரத்தியேக குழு நியமனம்: முறைப்பாடளிக்க தனியான தொலைபேசி இலக்கம்

🕔 December 14, 2023

த ரீதியான வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் – சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பான குற்றங்களை விசாரிப்பதற்காக – பிரத்தியேகமான குழுவொன்றை உருவாக்குமாறு பொலிஸ் கணினி குற்றப்பிரிவுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உத்தரவு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மத ரீதியான வெறுப்புணர்வு மற்றும் வன்முறைகளை ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை இடுவோருக்கு எதிராக முறைபாடுகள் அளிப்பதற்கு விசேட தொலைபபேசி இலக்கங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

0112300637, என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவும் 0112381045 என்ற பக்ஸ் இலக்கத்தினூடாகவும் முறைபாடு அளிக்கமுடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ccid.religious@police.gov.lk என்ற மின்னஞ்சல் வழியாகவும் முறைபாடுகளை வழங்க முடியும் என்றும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்